இதை மட்டும் நீங்க பண்ணுங்க; பல்லி, கரப்பான் பூச்சி எதுவும் வராது…

17 hours ago
ARTICLE AD BOX

அழையா விருந்தாளியாக எப்போதும் வீட்டில் இருப்பவர்கள் தான் கரப்பான் பூச்சிகளும், பல்லிகளும். இவைகள் நம்மை கடிப்பது இல்லை என்றாலும், உணவுகளில் அல்லது தண்ணீரில் இவைகள் விழுந்து விட்டால் பெரும் பிரச்சனை தான். இதனால், முடிந்த வரை இவைகளை வராமல் தடுப்பது நல்லது. பலர் இவைகள் வராமல் தடுக்க கெமிக்கல் ஏதாவது ஒன்றை வைப்பது உண்டு. ஆனால் இது ஆபத்து தான். குழந்தைகள் இருக்கும் வீடுகளில், இந்த தவறை ஒரு போதும் செய்து விடாதீர்கள்.

ஒரு சில மாதங்களுக்கு எலியை விரட்ட வீட்டில் வைத்த கெமிக்களால், மூச்சு திணறல் ஏற்பட்டு ஒரே வீட்டில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் நீங்கள் அது போன்ற கெமிக்கல்களை பயன்படுத்தாமல், முடிந்த வரை வீடுகளில் இருக்கும் பொருள்களை வைத்து கரப்பான் பூச்சி, பல்லியை விரட்டுவது நல்லது. இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்சை ஃபாலோ பண்ணலாம்.

இதற்கு நீங்கள், காலாவதியான மாத்திரைகளை பவுடராக இடித்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் மிளகுத்தூள், காபித்தூள் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் பாட்டிலில் சேர்த்துக் கொள்ளவும். ஸ்ப்ரே பாட்டில் இல்லை என்றால், நீங்கள் பழைய ஜூஸ் பாட்டில் பயன்படுத்தலாம். இப்போது, டிஷ்யூ பேப்பர் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில், ஸ்ப்ரே பாட்டிலில் இருக்கும் நீரை தெளித்து, பின் அந்த பேப்பரை காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த பேப்பரை கரப்பான் பூச்சி, பல்லி இருக்கும் இடங்களில் போட்டு விடலாம். அதேபோல, ஸ்பிரே பாட்டிலில் இருக்கும் நீரை, அனைத்து இடங்களிலும் அடித்து விடலாம். இதனால், கரப்பான் பூச்சி, பல்லி திரும்ப வரவே வராது. இதற்கு பதில் நீங்கள், நாஃப்தலின் பால், கற்பூரம் இரண்டையும் பயன்படுத்தலாம்.

இதற்கு, நாஃப்தலின் பால், கற்பூரம் இரண்டையும் நசுக்கி கொள்ளவும். பின்னர் அதில் காலாவதியான மாத்திரையை சேர்த்து, அதனுடன் சிறிது கம்போர்ட் மற்றும் சிறுது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். இப்போது இந்த கலவையை ஒரு பாட்டில் ஊற்றி அடுப்பு திட்டுகளில் அடித்துவிடலாம், இதனால் கரப்பான் பூச்சி, பல்லிகள் வராது.

Read more: சரியாக காது கேட்கவில்லையா?? கவலையே வேண்டாம், வீட்டில் இருந்தே இதை செய்து பாருங்கள், உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

The post இதை மட்டும் நீங்க பண்ணுங்க; பல்லி, கரப்பான் பூச்சி எதுவும் வராது… appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article