ARTICLE AD BOX
இதெல்லாம் நடந்தா எப்படி இருக்கும்?.. ரஜினி முதல் விஜய் வரை.. முதுமையும் இளமையும்.. செம AI எடிட்!
சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தால் ஒரு பக்கம் நடிகைகளின் டீப் ஃபேக் ஆபாச வீடியோக்கள் அதிகம் வருவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி அதிர்ச்சியை கொடுத்து வந்தாலும், இன்னொரு பக்கம் தங்களுக்குப் பிடித்த ஹீரோக்களை எப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியுமோ அப்படியெல்லாம் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆரம்பத்தில் ஏகப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதன் அடுத்த கட்டமாக வீடியோக்கள் அதிகம் இணையத்தில் உலாவி வருகின்றன. சமீபத்தில் ஸ்க்விட் கேம் சீசன் 2 வெளியான நிலையில், சிவாஜி, ரஜினிகாந்த், விஜய், சூர்யா, அஜித் குமார், சிவகார்த்திகேயன், சரோஜா தேவி, நயன்தாரா உள்ளிட்ட பலர் அந்த விளையாட்டில் பங்கேற்றால் எப்படி இருந்திருக்கும் என்கிற கற்பனையுடன் உருவான ஏஐ எடிட் வீடியோ வேகமாக டிரெண்டானது.
இந்நிலையில், அந்த வரிசையில் முதுமையான ரஜினிகாந்த் தோளில் இளமையான ரஜினிகாந்த் கை போட்டுக் கொண்டே பேசி வருவது போன்ற வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில் ஏகப்பட்ட ஃபேவரைட் நடிகர்களின் முதுமையும் இளமையும் ஒன்று சேர்ந்து வருவதை பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
அடுத்த ஜெனரேஷன்: கம்ப்யூட்டர் காலம் என சொல்லிக் கொண்டிருந்த நிலையில், இணையம் வந்து அதனை இன்னமும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியது. காதலர் தினம் படத்தில் வந்த காட்சிகளை பார்த்துவிட்டு பலரும் பிரவுசிங் சென்டரில் காதலிக்கத் தொடங்கினர். அந்த வரிசையில் அடுத்த ஜெனரேஷனை கவர் செய்யும் விதமாக ஏஐ தொழில்நுட்பம் அனைத்து இடங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. எந்த கேள்விக்கும் பதிலை சாட் ஜிபிடி கொடுத்துவிடும் என தைரியமாக ஏஐ தொழில்நுட்பத்தை நம்பி இளைஞர்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்கின்றனர். ஏஐ மூலமாக சினிமா படங்களே உருவாகும் காலமும் வந்துவிட்டது.
முதுமையும் இளமையும்: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதியின் முதுமையும் இளமையும் ஒரு சேர ஒன்றிணைந்து வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏஐ எடிட் வீடியோவை பார்க்கவே சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இன்னும் கொஞ்சம் தத்ரூபமாக தொழில்நுட்ப வளர்ச்சியுடன் வந்துவிட்டால் ஒரிஜினலுக்கு வேலை இருக்காது என்றும் இதில், ஏகப்பட்ட பிரச்சனைகளும் உருவாகும் என்கிற எச்சரிக்கை தொனிகளும் கமெண்ட்டுகளாக குவிந்து வருகின்றன.
தவறான வீடியோக்கள்: ஜாலியான ஆரோக்கியமான ஏஐ எடிட்களுக்கு கண்டிப்பாக வரவேற்புகள் கிடைத்தாலும், சிலர் இதை பயன்படுத்தி தவறான வீடியோக்களையும் மோசமான ஆபாச எடிட்களையும் செய்து வெளியிட்டால் அது நிச்சயம் பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என்றும் பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களின் முகங்களை ஏஐ எடிட் வீடியோக்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.