ARTICLE AD BOX
இன்ஸ்டாகிராம் பிரபலத்திற்கும் விஜய்க்கும் இப்படி ஒரு உறவா? அட இது தெரியாம போச்சே!
சென்னை: இன்றைய காலகட்டத்தில் பிரபலமாக வேண்டும் என்றால், சோசியல் மீடியாவில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை போட்டால் பிரபலமாகிவிடலாம் என்பதற்காக பலரும் இணையத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை விதவிதமாக எடுத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், மிகவும் பிரபலமான ஒரு நடிகரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரும் தற்போது instagramல் பிரபலமாகி வருகிறார், அவர் யார் என்பதை இந்த செய்திகள் பார்க்கலாம்.
தளபதி விஜய் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். முழு நேர அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள விஜய் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். நடிப்பு ஒருபக்கம் இருக்க, விக்ரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை வெற்றி கரமாக நடத்தினார். அதுமட்டுமில்லாமல், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை நேரடியாக ஆதரவு தெரிவித்தார்.
தளபதி விஜய்: இப்படி இவரின் அரசியல் பயணம் சூடுபிடித்து வரும் நிலையில், விஜய்யின் தாய் மாமன் மகள் பல்லவி சுரேந்தர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாகி வருகிறார். விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகரின் உடன்பிறந்த சகோதரான எஸ். என். சுரேந்தர் தமிழ் படங்களில் நடிகராக நடித்திருக்கிறார். சென்னை 28 முதல் படத்தில் நடித்திருக்கும் இவர், 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றியுள்ளார். குறிப்பாக மைக் மோகனுக்கு பல திரைப்படத்தில் குரல் கொடுத்தது இவர் தான்.
தாய் மாமன் மகள்: இவரது மூத்த மகள் தாள் பல்லவி சுரேந்தர், டப்பிங் கலைஞராகவும் பாடகராகவும் உள்ள வினோத் என்பவரை திருமணம் கொண்டு தற்போது துபாயில் வசித்து வருகிறார். அண்மையில் இவர்,ஷோபா மற்றும் எஸ் ஏ சந்திரசேகருடன் சேர்ந்து காசு மேல காசு கீழே என்ற பாடலை ரீல்ஸ் போட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் அதிக லைக்குகளை அள்ளியது. அதன் பிறகு தான் யார் என்று பலரும் இவரை தேடி இவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவரை, அறுவது லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, விஜய்யின் பேச்சு, கட்சிக் கொடி என அதைத்தையும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பல்லவி சுரேந்தர் வெளியிட்டு வருகிறார்.
நடிகர் விக்ராந்த்: அதே போல நடிகர் விக்ராந்தும் விஜய்க்கு தம்பி முறையாகும், அவருக்கும் பார்ப்பதற்கு விஜய் போலத்தான் இருப்பார். இவர் 2005ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்ல. விக்ராந்த். கிட்டதட்ட 14 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் இவர், வெறும் 17 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஹீரோவாக நடித்து வந்த இவர் பட வாய்ய்பு வராததால், ஹீரோவுக்கு நண்பனாகவும், இரண்டாவது ஹீரோவாகவும் நடித்தார். விஷால் நடிப்பில் வெளியான பாண்டிய நாடு படத்தில் இவர் நடிப்ப பேசப்பட்டது. அதே போல விஜய்சேதுபதி நடித்த கவண் படத்திலும் ஒரு நல்ல ரோலில் நடித்திருந்தார். இவர் கடைசியா சூப்பரின் மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் சுமாரா