மீண்டும் தாயாகும் நடிகை எமி ஜாக்சன்… இன்ஸ்டாவில் போட்ட போட்டோ… குவியும் வாழ்த்துக்கள்..!!

4 hours ago
ARTICLE AD BOX

இங்கிலாந்தின் மாடல் அழகியாக இருந்த எமி ஜாக்சன் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் தமிழ் திரையுலகில் மதராசபட்டினம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மதராசபட்டினத்தை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தமிழில் அமைந்தன. ஐ, தங்கமகன், தெறி, எந்திரன் 2.0, தாண்டவம் என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார்.

சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த இவர் 2019 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை நிச்சயம் செய்தார். அதே ஆண்டு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டார். இதனை அடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு ஹெட் வெஸ்டலிக் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நடிகை எமி ஜாக்சன் தற்போது இரண்டாவது கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Entire Article