இதுக்கு மேல அபராதம் கட்ட முடியாது குருநாதா.. ஊழியர்களை மொத்தமாக தூக்கும் Citi..!!

9 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

இதுக்கு மேல அபராதம் கட்ட முடியாது குருநாதா.. ஊழியர்களை மொத்தமாக தூக்கும் Citi..!!

News

சிட்டி குரூப் நிறுவனம் அல்லது சிட்டி நிறுவனம் ஒரு அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவைகள் வழங்கும் நிறுவனமாகும். சமீபகாலமாக, தரவு நிர்வாகம் மற்றும் குறைபாடுள்ள கட்டுபாடுகள் தொடர்பாக ஒழுங்குமுறை தண்டனைகளுடன் இந்நிறுவனம் போராடி வருகிறது. கடந்த ஆண்டு நீண்ட கால தரவு மேலாண்மை சிக்கல்களை தீர்க்க தவறியதற்காக வங்கிக்கு 13.60 கோடி டாலரை அபராதமாக ஆணையங்கள் விதித்தன. இந்திய ரூபாய் மதிப்பில் அபராத தொகை மதிப்பு சுமார் ரூ.1.183 கோடியாகும்.

இதனையடுத்து சிட்டி நிறுவனம் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்ததாரர்களை நம்பியிப்பதை குறைத்து, பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சிட்டி குழுமத்தின் தொழில்நுட்ப தலைவர் டிம் ரியான் பணியாளர்களிடம் பேசுகையில், சிட்டி குழுமம் ஐடி துறையில் பணிபுரியும் வெளிப்புற ஒப்பந்ததாரர்களை தற்போதைய 50 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்ததாக தகவல் வெளியானது. டிம் ரியான் கடந்த ஆண்டு ஜூனில்தான் சிட்டி நிறுவனத்தில் இணைந்தார்.அதற்கு முன்பு அவர் பிடபுள்யூசி நிறுவனத்தில் பணியாற்றினார்.

இதுக்கு மேல அபராதம் கட்ட முடியாது குருநாதா.. ஊழியர்களை மொத்தமாக தூக்கும் Citi..!!

அதேசமயம், இந்த மாற்றத்துக்கான (ஐடி ஒப்பந்ததாரர்களை குறைப்பது) துல்லியமான காலக்கெடு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக சிட்டி நிறுவனம் அதிக பணியாளர்களை பணியமர்த்துவதன் மூலம் பதவிகளை நிரப்பும். 2024ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவில் 48,000 ஊழியர்கள் பணியாற்றினர். இந்த பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கையை 50,000ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

சிட்டி குழுமம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை மேம்படுத்துதல், வருவாய் வளர்ச்சியை செயல்படுத்துதல் மற்றும் செயல்திறனை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான எங்கள் உத்தியை ஆதரிக்க சிட்டி எங்கள் உள் தொழில்நுட்ப திறன்களை வளர்த்து வருகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் சிட்டி நிறுவனத்தின் நிதி்த் தலைவர் மார்க் மேசன் பேசுகையில், சிட்டி தனது தரவு சிக்கல்களை தீர்க்க அதிக முதலீடு செய்வதாகக் தெரிவித்தார்.

Read Entire Article