ARTICLE AD BOX
சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமாகி தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சமீபத்தில் வெளியான ஃபயர் படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது அவர் பட பூஜையில் இருப்பது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதால், அவர் அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து ரச்சிதாவே விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். சீரியல் மூலம் பிரபலமான அவர், ஒரு கட்டத்தில் கன்னட பட வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் சின்னத்திரைக்கு என்டரி ஆனார்.
ரீ-என்டரியில் ரச்சிதா ஜீ தமிழ் சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வந்தார். சின்னத்திரை மட்டுமல்லாமல், உப்புக்கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரச்சிதா மகாலட்சுமி, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சின்னத்திரை மட்டுமல்லாமல், தற்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், ரச்சிதா, கடந்த ஆண்டு கன்னடத்தில் ரங்கநாயகா, மற்றும் தமிழில் எக்ஸ்ட்ரீம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் ஃபையர் என்ற படம் வெளியானது. இந்த படத்தின் ஒரு பாடலில் ரச்சிதா க்ளாமராக நடித்திருந்தது கடுமையாக விமர்சனங்களை கொடுத்தது. ஆனாலும் இந்த படம் தமிழில் ஓரளவு வரவேற்பை பெற்று ரச்சிதாவுக்கு சுமாரான வெற்றியைம் கொடுத்தது. இதனிடையே தற்போது ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது புதிய திரைப்படத்திற்கான பூஜையா? அல்லது, புதிய சீரியலுக்கான பூஜையா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், சன்டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு திகில் தொடருக்கான பூஜை என்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது இது குறித்து ரச்சிதாவே விளக்கம் அளித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இன்று நான் வெளியிட்ட பூஜை பட புகைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கான புகைப்படங்கள் தான் இது சீரியலுக்கான புகைப்படங்கள் அல்ல மீண்டும் சீரியலில் உங்களை சந்திப்பதாக இருந்தால் சந்தோஷம்தான் ஆனால் இந்த தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் ரச்சிதா மீண்டும் சினிமாவில் நடிக்க கமிட் ஆகியுள்ளதால் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.