ARTICLE AD BOX

image courtesy: PTI
இண்டியன்வெல்ஸ்,
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ரைபகினா (கஜகஸ்தான்) காடி போல்டெர் (இங்கிலாந்து) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ரைபகினா 6-0, 7-5 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஒவர் 4-வது சுற்றில் மிர்ரா ஆன்ட்ரீவா உடன் மோத உள்ளார்.