ARTICLE AD BOX

ஐபிஎல் 18 வது சீசன் இந்த வருடம் நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது .அதன்படி வருகின்ற 22ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் கட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியானது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர் கொள்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் வரும் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் உடன் மோதுகிறது.
இதனால் அனைத்து அணியினரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி சாம்பியன் டிராபியை வென்ற இந்திய வீரர்கள் தனித்தனியாக தாயகம் திரும்பி வருகிறார்கள். அந்த வகையில் முன்னணி வீரர் ஜடேஜா தாயகம் திரும்பியதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு இணைந்துள்ளார். இதனை சிஎஸ்கே நிர்வாகம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சமீபத்தில் வெளியான புஷ்பா ஸ்டைலில் வெளியிட்டு அறிவித்துள்ளது.
https://twitter.com/i/status/1899273589289083135