ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றாதீர்கள்! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

4 hours ago
ARTICLE AD BOX

ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றாதீர்கள்! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

Chennai
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றாதீர்கள் என பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைப்பு விழா நடந்தது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், கட்சித் தொடங்கியதுமே தேர்தலில் நின்று ஆட்சிக்கு வர வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள்.

cm stalin rn ravi tamil nadu

திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது. திமுக நேற்று முளைத்த காளான் அல்ல. நீங்கள் (சீமான்) தரக்குறைவாக பேசப் பேசத்தான் உங்களை விட்டு விலகுகிறார்கள். அவரால் திமுக வளர்கிறது.

அது போல் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு திமுகவை வளர்க்கிறது. என்றைக்காவது ஆளுநரை மாற்ற வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறாமோ? அவரை மாற்ற வேண்டாம். அடுத்த முறையும் அவர் ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேற வேண்டும். அதை நாம் பார்க்க வேண்டும்.

எனவே இப்போது நான் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமித்ஷாவுக்கும் கோரிக்கை வைக்கிறேன், ஆளுநரை மாற்ற வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

More From
Prev
Next
English summary
CM Stalin asks not to get back Tamil nadu Governor R.N.Ravi.
Read Entire Article