நடிகர் ஜெயசீலன் காலமானார்!

7 hours ago
ARTICLE AD BOX

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ஜெயசீலன் சென்னையில் காலமானார்.

புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஜெயசீலம்(40). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் வெள்ளிக்கிழமை சென்னையில் காலமானார்.

விடாமுயற்சி தலைப்புக்கென ஒரு சக்தி இருக்கிறது: அஜித் குமார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஜெயசீலனின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா துறையில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயசீலன் திருமணமே செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே ஜெயசீலனின் மறைவு ரசிகர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Read Entire Article