மகாராஷ்டிராவில் பயங்கரம் ஆயுத தொழிற்சாலை வெடி விபத்தில் 8 பேர் பலி: 7 பேர் படுகாயம்

5 hours ago
ARTICLE AD BOX

பண்டாரா: மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டம் ஜவகர் நகரில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று வழக்கம் போல ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை 10.30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர் உடல்சிதறி உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிலர் படுகாயங்களுடன் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர். இந்த சம்பவம் குறித்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உட்பட பல்வேறு மீட்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இவர்கள் விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதே நேரத்தில் விபத்தில் பலியான 8 பேரை சடலமாக மீட்டனர். விபத்து நடந்த இடத்தை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் சென்று பார்வையிட்டார்.

The post மகாராஷ்டிராவில் பயங்கரம் ஆயுத தொழிற்சாலை வெடி விபத்தில் 8 பேர் பலி: 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article