தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்தில் பயன் பெயர் 50 நாட்களில் 20,000 பேர் விண்ணப்பம்!

6 hours ago
ARTICLE AD BOX

சென்னை: கலைஞர் கைவினை திட்டத்தில் 50 நாட்களில் 20,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். கைவினை கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் கலைஞர் கைவினை திட்டத்திற்கு பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. 11,708 பேருக்கு ரூ.51 கோடி கடன் தர வங்கிகளுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. தற்போது வரை 2,965 பேருக்கு ரூ.11 கோடி அளவுக்கு கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவினை திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ.75 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது

கலைஞர் கைவினை திட்டத்தில் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடனுதவி பெறலாம். 25% மானியமாக அதிகபட்சம் ரூ.50,000 மானியம் வழங்கப்படும்; மேலும் 5% வரை வட்டி மானியமும் வழங்கப்படும். இந்நிலையில் கைவினை கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்தில் பயன் பெயர் 50 நாட்களில் 20,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

The post தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்தில் பயன் பெயர் 50 நாட்களில் 20,000 பேர் விண்ணப்பம்! appeared first on Dinakaran.

Read Entire Article