ARTICLE AD BOX
யாஷ் நடிக்கும் டாக்ஸிக் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் சாப்டர் 1 மற்றும் சாப்டர் 2 ஆகிய திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது ரன்வீர் கபூர் சாய்பல்லவி ஆகியோருடன் இணைந்து ராமாயணா என்ற திரைப்படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். இதற்கிடையில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் டாக்ஸிக் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் யாஷுடன் இணைந்து நயன்தாரா, ஹூமா குரேஷி, கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இந்த படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர இருப்பதாக படக்குழு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படமானது கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இப்படம் ஆங்கிலத்திலும் வெளியாக இருக்கிறது. இப்படம் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை சர்வதேச அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.