அவசர அவசரமாக டெல்லிக்கு போன செந்தில் பாலாஜி.. அந்த டீமை சந்தித்து ஆலோசனை.. என்ன நடக்குது?

3 hours ago
ARTICLE AD BOX

அவசர அவசரமாக டெல்லிக்கு போன செந்தில் பாலாஜி.. அந்த டீமை சந்தித்து ஆலோசனை.. என்ன நடக்குது?

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று அவரமாக டெல்லி சென்றார். இன்று விடியற்காலையில் சென்னை திரும்பியுள்ளார். அவரின் இந்த திடீர் டெல்லி பயணம் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டினை செந்தில் பாலாஜி மறுத்திருந்தாலும், அதனை திமுக அரசும், செந்தில்பாலாஜியும் அலட்சியமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. முக்கியமாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் முருகன் ஆகியோர் இதை தீவிரமாக கையில் எடுத்துள்ளனர்,

Senthil Balaji Tasmac

அமைச்சர் எல் முருகன் இதை பற்றி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில், திமுக ஆட்சியில் டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறையின் அறிக்கையால் ஆடிப்போயுள்ள திமுக அரசு, இது தொடர்பான தகவல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஊழலை தமிழக மக்களிடத்தில் எடுத்துச் சென்று, உண்மையை அம்பலப்படுத்தி வருகிறது நமது தமிழக பார‌திய ஜனதா கட்சி. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை, என்று உள்ளார்.

அண்ணாமலை கைது

தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழல் செய்யப்பட்டதாக நேற்று முதல்நாள் பாஜக போராட திட்டமிட்டு இருந்தது. இதையடுத்து அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று அவரமாக டெல்லி சென்றார். இன்று விடியற்காலையில் சென்னை திரும்பியுள்ளார். அவரது டெல்லி வருகையை மத்திய உளவுத்துறை உன்னிப்பாக கவனித்துள்ளது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் இந்த டெல்லி சீக்ரெட் பயணம் மேல்மட்டங்களில் கவனம் பெற்றுள்ளது.

செந்தில் பாலாஜி டெல்லி பயணம்

இந்த வழக்கால் ஆத்திரமடைந்துள்ள திமுக அரசு, தமிழகம் முழுவதும் பாஜகவினர் மீது வன்முறையை ஏவி வருகிறது. டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள 1000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட முயன்ற பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். பாஜக தொண்டர்கள் மீது காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

அதனால், அமலாக்கத்திறையின் குற்றச்சாட்டினை சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்தும், 'நீங்கள் அமைச்சராக நீடிக்க விரிம்புகிறீர்களா? அல்லது விலக நினைக்கிறீர்களா? என்பதை நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள்' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு பதில் செல்லாமல் காலம் தாழ்த்தி வருகிற சூழலில் விரைவில் அது தொடர்பான ஹியரிங் சுப்ரீம் கோர்ட்டில் வரவிருப்பதால் அது குறித்தும் சீனியர் வழக்கறிஞர்கள் டீமிடம் டெல்லியில் விவாதித்துள்ளாராம் செந்தில்பாலாஜி.

மேலும், உயர்மட்ட செல்வாக்குள்ள இருவரையும் சந்தித்தித்து விவாதித்துள்ளார். இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று காலையில் டெல்லிக்கு சென்றுள்ளார். சட்டத்துறை அமைச்சரை கிரிமினல் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணாமலை விமர்ச்சித்திருந்த நிலையில், ரகுபதியின் இந்த டெல்லி பயணத்தை முடிச்சுப் போட்டு அரசியல்ரீதியாக விவாதிப்பதும் நடக்கிறது.

More From
Prev
Next
English summary
Why did Minister Senthil Balaji go to Delhi all of a sudden? What is the reason?
Read Entire Article