அழகை கூட்ட வீட்டிலே செலவில்லா விரல் மசாஜ்! செய்வது எப்படி?

2 hours ago
ARTICLE AD BOX

அழகு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. நம்மை நாம் பார்க்கும்போதே அழகாக தெரிய வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவர். அந்தவகையில், நமது முகம் மட்டுமல்லாமல் கைகளும் அழகாக தெரியவேண்டும் என்றால் அதன் மீது கவனம் செலுத்துவதும் முக்கியம்தானே!

கை விரல்களை அழகாகக் காட்ட நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டால் மட்டும் போதாது. மசாஜ் செய்து முறையாகப் பராமரித்தலும் அவசியம்.

தெரிந்த ஃப்யூட்டிசியன் கூறிய எளியமுறை இதோ:

உடல் ரிலாக்ஸாக இருக்க Body மசாஜ் உடன், கை மற்றும் விரல்களுக்கு மசாஜ் செய்வது அவசியம்.

விரல்களை அதிகம் பயன்படுத்தி வேலை செய்பவர்கள், இந்த எளிமையான மசாஜை செய்து வந்தால், வலி நீங்கி புத்துணர்ச்சியைப் பெறலாம்.

முதலில் சிறிது எண்ணெய் அல்லது கைகளுக்குத் தடவும் லோஷன். இவற்றில் ஏதாவது ஒன்றை கைகளில் தடவி பின் மெதுவாக அதை தோலில் ஊடுருவும் வரை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் விட்டமின் E உள்ள எண்ணெய் கொண்டு கைவிரல்கள், முக்கியமாக மணிக்கட்டுப்பகுதி, உள்ளங்கை ஆகிய இடங்களில் மசாஜ் செய்வது முக்கியம்.

ஒவ்வொரு விரல்களுக்கிடையேயும் பெருவிரலை மெதுவாக விட்டுவிட்டு மசாஜை அடிக்கடி செய்துவர உடல் ரிலாக்ஸ் ஆகும்.

இதையும் படியுங்கள்:
கழுத்து சுருக்கங்களை குறைக்க உதவும் இயற்கை மசாஜ் முறைகள்!
Finger massage

விரல்களில் இருக்கும் நரம்புகள் மணிக்கட்டுடன் இணைவதால், மணிக்கட்டு மசாஜ் புத்துணர்ச்சியைத் தரும்.

இதற்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை. டீ.வி. பார்க்கும் நேரம் அல்லது வாக்கிங் செல்லும் நேரங்களில் கூடச் செய்யலாம். இது செலவற்ற விரல் மசாஜ்தானே நண்பர்களே!

Read Entire Article