சென்னையில் 72 'ரூட்'களில் மினி பஸ்கள்: பட்டியல் வெளியிட்ட தமிழக அரசு

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்,  புதிதாக 72 வழித்தடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, மினி பஸ் இயக்குவதற்கு, அனுமதி சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் என்று, சென்னை மாவட்ட ஆட்சியர், ரஷ்மி சித்தார்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisment

சென்னை மாவட்ட ஆட்சியர், ரஷ்மி சித்தார்த் இது குறித்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில், மினி பஸ் இயக்குவதற்கான புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அந்த வழித்தடங்களில், பொது மக்களின் பயன்பாட்டிற்காக மினி பஸ் இயக்குவதற்கான புதிய அனுமதி சீட்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். சென்னை வடக்கு மண்டலத்தில் 33, தெற்கு மண்டலத்தில் 39 என மொத்தம் 72 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த வழித்தடங்களில், மினி பஸ்களை இயக்க விரும்புவோர், வழித்தட விவரங்களை குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வருகிற மார்ச் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது, சென்னையில் மினி பேருந்து இயக்குவது தொடர்பாக புதிய வழித்தட விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது,
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை(வடகிழக்கு) 33 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சோழிங்கநல்லூர், சென்னை-119 வழிகளில் 39 வழித்தடங்கள் என மொத்தம் 72 வழித்தடங்களில் இந்த மின் பஸ் சேவை இயக்கப்பட் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article