அறுவை சிகிச்சைக்கு பிறகு ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பதற்கு தயாராகும் சிவராஜ்குமார்!

5 hours ago
ARTICLE AD BOX

நடிகர் சிவராஜ்குமார் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு 'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பதற்கு தயாராகும் சிவராஜ்குமார்!

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிவராஜ்குமார். அந்த வகையில் இவர் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். மேலும் இவர் தமிழில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் அண்ணனாக நடித்திருந்தார. அதே சமயம் இவர் ஜெயிலர் திரைப்படத்தில் கேமியா ரோலில் நடித்து திரையரங்கை அதரவிட்டார். இவருடைய காட்சிகள் இப்படத்தில் சில நிமிடங்களே இடம் பெற்று இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எனவே ரஜினி, நெல்சன் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தான் நலமுடன் இருப்பதாக சிவராஜ்குமார் வீடியோ ஒன்றிணையும் வெளியிட்டிருந்தார்.அறுவை சிகிச்சைக்கு பிறகு 'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பதற்கு தயாராகும் சிவராஜ்குமார்! இந்நிலையில் சிவராஜ்குமார் வருகின்ற மே மாதத்தில் இருந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளாராம். அதன்படி இவர், ஜெயிலர் 2 படத்திற்கு தயாராகி வருவதாகவும் இந்த படத்திற்காக 15 நாட்கள் கால்ஷீட் தந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் சிவராஜ்குமார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆதலால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article