ARTICLE AD BOX
நா.த.க. தலைவர் சீமான் வீட்டில் நேற்று காவலாளியைத் தாக்கிப் பிடித்த காவல்துறை உதவி ஆய்வாளருக்கு வேறொரு வழக்கில் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீமான் மீதான பாலியல் குற்றச்சாட்டில் சென்னை, வளசரவாக்கம் காவல்நிலையத்தினர் ஒட்டிய பிடியாணையைக் கிழித்ததாகக் குற்றஞ்சாட்டி, அவருடைய வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தார், நீலாங்கரை காவல்நிலைய உ.ஆ. பிரவீண் ராஜேஷ். அவரைத் தடுத்த காவலாளியும் முன்னாள் படைவீரருமான அமல்ராஜை பிரவீணும் அவருடன் சென்ற இரண்டு காவலர்களும் கடுமையாகத் தாக்கினர்.
ஊடகங்களில் இந்தக் காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பாகின. சீமானின் மனைவி கயல்விழியும் இன்று காலையில் தன் வீட்டு முன்பாக ஊடகத்தினரிடம் பேசுகையில், காவல்துறையினரின் நடத்தை குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு வழக்குரைஞர் ஒருவரைத் தாக்கியதில் பிரவீண் மீது வழக்கு பதியப்பட்டது. அதில் வரும் 3ஆம்தேதி முன்னிலையாகுமாறு தாம்பரம் நீதிமன்றம் அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.