அரையிறுதி போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் இந்திய வீரர்கள் – காரணம் என்ன?

3 hours ago
ARTICLE AD BOX

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான முதலாவது அரையிறுதி போட்டியானது மார்ச் 4-ஆம் தேதியான இன்று துபாய் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் இறுதிப் போட்டிக்கு செல்லும் முனைப்போடு பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

கருப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் இந்திய வீரர்கள் :

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அந்த அணி சார்பாக கடந்த போட்டியின் போது காயமடைந்த துவக்க வீரர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு பதிலாக கூப்பர் கோனாலி சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியை பொறுத்தவரை எவ்வித மாற்றமும் இன்றி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணிதான் விளையாடுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் தற்போது கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

அதற்கான காரணம் என்ன? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்மகர் ஷிவல்கர் தனது 84-ஆவது வயதில் உடல்நல குறைவு காரணமாக நேற்று இந்தியாவில் மரணம் அடைந்தார். அவரது இந்த மறைவுக்கு பிசிசிஐ-யும் தங்களது அதிகாரவபூர்வ பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தது.

அவரது இந்த மறைவின் காரணமாகவே துக்கத்தை அனுசரிக்கும் விதமாக இந்திய அணியின் வீரர்கள் தங்களது கையில் கருப்பு பட்டையை அணிந்து விளையாடி வருகின்றனர். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பத்மகர் ஷிவல்கர் 124 முதல் தர போட்டிகளில் விளையாடி 589 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : போன மேட்ச் 5 விக்கெட் எடுத்தது வீண் போகல.. இந்திய அணி எடுத்த பக்கா முடிவு – வருணுக்கு அடிச்ச லக்

சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாட விட்டாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளதால் அவருக்கு இந்த மரியாதையை இந்திய அணி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அரையிறுதி போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் இந்திய வீரர்கள் – காரணம் என்ன? appeared first on Cric Tamil.

Read Entire Article