ரவீந்திர ஜடேஜா மீது ஆஸ்திரேலியா பரபரப்பு புகார்.. அம்பயர் கொடுத்த வார்னிங்

3 hours ago
ARTICLE AD BOX

Ravindra Jadeja : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் கள நடுவர் ரவீந்திர ஜடேஜாவை பந்துவீச வரும்போது தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துபாய் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 264 ரன்கள் குவித்த நிலையில் போட்டியின் நடுவே திடீரென ஜடேஜாவை பந்துவீச அனுமதிக்க முடியாது அம்பயர் கூறியது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அம்பயரின் அறிவுறுத்தலை ஏற்ற பின்னரே அவர் பந்துவீச அனுமதிக்கப்பட்டார். 

என்ன நடந்தது?

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீதிர ஜடேஜா 18வது ஓவரை வீச வந்தார். அப்போது கையில் காயம் படாமல் இருக்க பேண்ட்டேஜ் போட்டிருந்தார். இது குறித்து களத்தில் இருந்து லபுசேன் நடுவரிடம் கூற அம்பயரும் அதனை கவனித்தார். உடனே ரவீந்திர ஜடேஜா அருகில் சென்ற அம்பயர் உங்களை பந்துவீச அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். ஜடேஜா ஏன் என்று கேட்க, கையில் இருக்கும் பேண்டேஜை உடனே நீங்கள் கழற்ற வேண்டும் என தெரிவித்தார். ஆனால் ஜடேஜா கையில் காயம் படாமல் இருக்கவே இதை கட்டியிருக்கிறேன். இதைபோய் கழற்ற சொல்கிறீர்களே என கூற, அம்பயர் ஜடேஜாவின் விளக்கத்தை ஏற்கவில்லை. 

அம்பயர் ஏன் அப்படி நடந்து கொண்டார்?

உடனே கேப்டன் ரோகித் சர்மாவும் அம்பயர் அருகில் சென்று விளக்கதை கேட்டார். பந்து சேதப்படுத்த வாய்ப்பு இருப்பதால் கையில் போட்டிருக்கும் பேண்டேஜூடன் ஜடேஜாவை பந்துவீச அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக அம்பயர் கூறிவிட்டார். இதனால் ஜடேஜா கோபமடைந்ததுடன் உடனே பேண்டேஜை கழற்றிவிட்டு பந்துவீசினார். இந்த கோபத்திலயே மார்னஸ் லபுசேன் மற்றும் ஜாஸ் இங்கிலீஸ் விக்கெட்டை அடுத்தடுத்து எடுத்தார் அவர். இந்த இரு விக்கெட்டை எடுத்ததும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். 

ஆஸ்திரேலிய 264 ரன்கள் இலக்கு

முடிவில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸிங்கை ஆடும். சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 27 ஆண்டுகளாக அரையிறுதிப் போட்டியில் தோற்றதில்லை என்ற வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு நீடிக்குமா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர். 

மேலும் படிக்க | IND vs AUS: குல்தீப் யாதவை ஒரே நேரத்தில்... கடுமையாக திட்டிய ரோஹித், விராட் - ஏன்?

மேலும் படிக்க | IND vs AUS: சுப்மன் கில் பிடித்த கேட்ச்சால் பரபரப்பு.. எச்சரித்த நடுவர்! வீடியோ வைரல்!

மேலும் படிக்க | IND vs AUS: டிராவிஸ் ஹெட் இல்லை! இந்திய அணியின் முக்கிய 3 வில்லன்கள் இவர்கள் தான்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article