ARTICLE AD BOX
துபாய்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில், குல்தீப் யாதவை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மூத்த வீரர் விராட் கோலி ஆகியோர் வசை பாடினார்கள். அவர் செய்த ஒரு தவறுக்காக இருவரும் அவரை கடிந்து கொண்டனர். அதிலும் ரோஹித் சர்மா வெளியே சொல்ல முடியாத அளவுக்கு மோசமான வார்த்தைகளால் குல்தீப் யாதவை திட்டினார்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் என அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தி வந்தனர். குல்தீப் யாதவுக்கு விக்கெட்டுகள் கிடைக்காத போதும், அவர் கட்டுக்கோப்பாகவே பந்து வீசி வந்தார்.

32-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அப்போது அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் எடுத்தார். பந்தை ஃபீல்டிங் செய்த இந்திய வீரர், குல்தீப் யாதவை நோக்கி வீசினார். அதை குல்தீப் யாதவ் பிடித்து இருக்க வேண்டும். மாறாக அந்த பந்தை கவர் திசையில் ஃபீல்டிங் நின்றிருந்த ரோஹித் சர்மா வசம் செல்வதற்கு விட்டுவிட்டார் குல்தீப்.
இது போன்ற நேரத்தில் எதிரணி பேட்ஸ்மேன்கள் மேலும் ரன் ஓடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் கேப்டன் ரோஹித் சர்மா குல்தீப் யாதவின் செயலால் அதிருப்தி அடைந்தார். இதுபோல பந்தை ஃபீல்டிங்கில் கண்மூடித்தனமாக நடந்து கொண்டால் எதிரணிக்கு கூடுதல் ரன்கள் கிடைக்கும் என்பதால் குல்தீப் யாதவை வெளியே சொல்ல முடியாத வார்த்தையால் திட்டினார் ரோஹித்.
IND vs AUS: ஜடேஜா பவுவிங் வீச கூடாது.. தடுத்து நிறுத்திய நடுவர்.. கடுப்பான ரோகித்.. என்ன நடந்தது?
அப்போது மற்றொருபுறம் நின்றிருந்த விராட் கோலியும், குல்தீப் யாதவின் செயலைப் பார்த்து கோபம் அடைந்தார். அவரும் குல்தீப் யாதவிடம் ஏதோ சத்தமாக கூறினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. சிலர் இதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டுள்ளனர். சிலர் குல்தீப் யாதவ் செய்ததற்கு இவ்வளவு மோசமாக திட்டியிருக்கக் கூடாது என அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.