குமரி டு சென்னை; 707 கிலோ மீட்டர்... 13 நாள்கள் - ஓடி சாதனை படைத்த 6 வயதுச் சிறுவன்!

3 hours ago
ARTICLE AD BOX

குமரி முதல் சென்னை வரை 707 கிலோ மீட்டர் தூரத்தை 13 நாள்களில் ஓடி அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் சாதனை படைத்துள்ளார், 6 வயதான சிவகங்கைச் சிறுவன்.

பாராட்டு விழாவில்

சிவகங்கையைச் சேர்ந்த சிவக்குமார்-ஆர்த்தி தம்பதியின் 6 வயது மகன் பெளதின் சிவார்திக், சிவகங்கை கே.ஆர் தொடக்கப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக நீண்ட தூரம் ஓடுவதில் (மராத்தான்) திறமையை வெளிப்படுத்தி வந்த பெளதின் சிவார்திக்கை, பெற்றோர்கள் உற்சாகப்படுத்தி மராத்தான் ஓட்டத்தில் சிறப்பு பயிற்சி அளித்தார்கள்.

இந்நிலையில் உலக அமைதி, பெண்கள் பாதுகாப்பு, தமிழ் மொழிப் பண்பாட்டு வளங்களைப் பாதுகாக்க, அனைவருக்கும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி... பெளதின் சிவார்திக்கின் பெற்றோர்கள் உருவாக்கிய கருப்பொருளுடன், சோழன் புக் அஃப் வேர்ல்டு ரெக்கார்டில் இடம்பெறும் வகையில், கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி கன்னியாகுமரியில் மராத்தானை தொடங்கிய பெளதின் சிவார்திக், பிப்ரவரி 28 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிறைவு செயதார்.

சாதனைச் சிறுவன் பெளதின் சிவார்திக்

மிக இளம் வயதில் மிகப்பெரும் சாதனை செய்து, சோழன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டில் இடம்பிடித்த பெளதின் சிவார்திக்கிற்கு சிவகங்கையிலுள்ள பொதுமக்கள்  வாழ்த்தி மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.

கே.ஆர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சரவணன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் ஜெயபாரதி, வட்டாரக்கல்வி அலுவலர் ஞானகிரேஸ் வளர்மதி, மற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களான பாண்டியராஜன், மைதிலி, வாணி, தமிழாசிரியர் இளங்கோ, ஆசிரியர்கள் முத்துசாமி, நிர்மலாஜோதி, சோழன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட் நிமலன் நீலமேகம், அரு.நடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

Read Entire Article