ARTICLE AD BOX
தாய்ப்பால் சுரப்பது முதல் வெள்ளைப்படுதல் சர்க்கரை நோய் ரத்த சுத்திகரிப்பு வரை ஏராளமான நன்மைகளை தரக்கூடியது அருகம்புல். தினமும் அருகம்புல் சாரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா? வீட்டு மருத்துவத்தில் எப்படி அருகம்புல்லை பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்..
எத்தகைய தன்மையிலும் அருகம்புல் வளரக்கூடியது யுனானி மருத்துவத்துக்கும் அருகம்புல்லுக்கும் ஒரு தனி மகத்துவம் உள்ளது இந்த புள்ளியில் உள்ள சத்துக்களை சொல்லி முடிக்க முடியாது…
குறிப்பாக மாவுச்சத்து உப்புச்சத்து நீர்ச்சத்து கரிச்சத்து அசிட்டிக் அமிலம் கொழுப்பு சத்து இப்படி எண்ணற்ற சத்துக்கள் இவற்றில் அடங்கியுள்ளது. அருகம்புல் சாற்றை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இந்த புல் கிடைக்காவிட்டால் அருகம் புல் பொடி என்று கடைகளில் அதாவது நாட்டு மருந்து கடைகளில் விற்கிறார்கள். இதனை பசும்பால் அல்லது சுடுநீரில் கலந்து குடிக்கலாம் இந்த சாற்றினை சிலர் துளசி இலைகளை சேர்த்து அரைத்தும் குடிப்பார்கள். அருகம்புல் சார் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்..
உடலில் உள்ள கழிவுகளையும் நச்சுகளையும் வெளியேற்றும் இதனால் உடல் எடை எளிதாக கரையும். உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைய துவங்கும் ரத்தத்தில் உள்ள அழுக்கு நீங்க சுத்தமாகும் அத்துடன் விஷ தன்மை ரத்தத்தில் இருந்தாலும் வெளியேறிவிடும். நினைவுத்திறனை பெருக்கி மன உளைச்சல் மன இறுக்கம் நீங்கும். சிறுநீர் எரிச்சலை நீக்கி சிறுநீர் பெருக்கம் அதிகமாகும் மூளை பாதிப்பு தாது விருத்தி குடைச்சல் வாய்வு வயிற்று நோய் மூலநோய் ரத்த கொதிப்பு, பித்தம் உஷ்ணம் வியாதிகள் ஆஸ்துமா கை கால் வலி சோர்வு என ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்தாக திகழ்கிறது இந்த அருகம்புல் ஜூஸ்..
சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற நரம்பு தளர்ச்சி குணமாக அருகம் புல் ஜூஸ் தான் உதவுகிறது தாய்ப்பாலை பெருக செய்யவும் இது உதவுகிறது நெஞ்சு சளி இருந்தால் அதனை கரைத்து வெளியேற்றுகிறது. தினமும் 50 மில்லி அருகம்புல் சாரினை காலையில் குடித்து வருபவர்களுக்கு கை கால் வலிப்பு ரத்தசோகை உடல் சோர்வு அடிக்கடி வரும் மயக்கம் போன்றவைகள் குணமாகும்.ரத்த சர்க்கரை அளவு சீராக வேண்டுமானால் அருகம்புல் சாரினை தினமும் சுமார் 100 மில்லி காலையில் சாப்பிட்டு வர வேண்டும் இப்படியே 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்..!!