அரிசி ஊறிய தண்ணீரை வேஸ்ட் பண்ணாதீங்க... 48 மணி நேரம் கழித்து நடக்கும் மேஜிக்: டாக்டர் மைதிலி

3 hours ago
ARTICLE AD BOX

சரும பராமரிப்பில் அரிசி கழுவிய தண்ணீர் முக்கிய பங்கு வகிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனை பயன்படுத்தி நம் முகத்தை பொலிவாக மாற்ற முடியும். அதனடிப்படையில், அரிசி கழுவிய தண்ணீரை முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என்று மருத்துவர் மைதிலி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு உடனடியாக முகத்தை கழுவும் பழக்கம் கொண்டவர்களாக சிலர் இருப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்யக் கூடாது என மருத்துவர் மைதிலி கூறுகிறார். தினமும் சாதம் வடிப்பதற்கு முன்னதாக, சிறிது நேரம் அரிசியை தண்ணீரில் ஊற வைப்போம். அதன்படி, அந்த தண்ணீரில் குறைந்தது இரண்டு மணி நேரங்களாவது அரிசி ஊறி இருக்க வேண்டும்.

பின்னர், இந்த தண்ணீரை மட்டும் ஒரு பாத்திரத்தில் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை அடுத்த 48 மணி நேரத்திற்கு அப்படியே மூடி வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது அந்த தண்ணீரில் ஃபெர்மெண்டேஷன் நடைபெறும். அப்போது, இனோசிட்டொல் என்ற வேதிப்பொருள் அதில் உருவாகும்.

இந்த வேதிப்பொருள் தான் செல்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். இவை சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்தும். இதன் மூலம் பார்ப்பதற்கு இளமையாக காட்சியளிப்போம். இவை முகத்தில் இருக்கும் பருக்கள், கருமைகளை நீக்க உதவி செய்யும். மேலும், இவை சருமத்தில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

Advertisment
Advertisement

இதற்காக அரிசி கழுவிய தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஒரு பாத்திரத்தில் மூடி வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர், இந்த தண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்யும் போது அதன் பலன் முழுமையாக கிடைக்கும் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார்.

நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Read Entire Article