ARTICLE AD BOX
Aman Verma and Vandana Lalvani Divorce : நடிகர் அமன் வர்மாவும் அவருடைய மனைவி வந்தனா லால்வானியும் 9 வருஷத்துக்கு பிறகு பிரிவது பற்றி ஏராளமான செய்திகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஜோடி 2014ல 'ஹம்னே லி ஹை ஷபத்' என்ற சீரியல் செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர். இதையடுத்து இருவரும் காதலில் விழுந்து அதன் பிறகு திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். கடைசியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமன் வர்மா மற்றும் வந்தனா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது காதலை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அப்படி இருவருக்குள்ளும் நெருக்கமான பந்தம் இருந்ததாக ரசிகர்கள் நினைத்தார்கள். அதோடு எல்லோரது வாழ்க்கையிலும் இருப்பது போன்று தான் இவர்களது வாழ்க்கையிலும் நிறைய கஷ்டங்கள் எல்லாம் இருந்தது. அதையெல்லாம் கடந்து வந்தார்கள்.
மன்னத் வீட்டை விட்டு வெளியேறி தமிழ் பட ஹீரோயின் வீட்டில் வாடகைக்கு குடியேறும் ஷாருக்கான்! ஏன்?
விவாகரத்து பெற்று பிரியும் அமன் வர்மா – வந்தனா லால்வானி:
நீண்ட நாட்களாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாரு இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு இடையில் பிரிவு ஏற்பட்டுள்ளது. அவர்களது பிரச்சனையை அவர்களால் சரி செய்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு இடையில் இடைவெளி இருந்து கொண்டே வந்துள்ளது. குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்த போதும் கூட அவர்களது கருத்து வேறுபாடு காரணமாக அது நடக்கவில்லை. இதன் காரணமாக கடைசியாக வந்தனா லால்வானி விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
நாட்டாமை தெலுங்கு ரீமேக்கிற்கு பிறகு ஏன் ரஜினிகாந்த் தெலுங்கில் நடிக்கவில்லை?
எவ்வளவோ முயற்சி செய்தும் அதற்கான பலன் இல்லாத நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரைக்கும் இந்த முடிவு குறித்து இருவரும் அறிவிக்கவில்லையாம். அமன் வர்மா பிரபலமான சீரியல் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கியூங்கி சாஸ் பி கபி பகு தி, பாக்பான் மாதிரியான சீரியல்ல நடித்திருக்கிறார். விவாகரத்து குறித்து இப்போது எதவும் பேசாமல் அமைதியாக இருக்கும் அமன் வர்மா விரைவில் தனது வழக்கறிஞர் மூலமாக சரியான நேரத்தில் பதில் சொல்வேன் என்று சொல்லியிருக்கிறார். வந்தனாவும் தற்போது வரையில் அமைதியாகவே இருக்கிறார்.
கோடிகளை கொட்டியும் சொதப்பும் அனிருத்; சீப் அண்ட் பெஸ்டாக மாஸ் காட்டும் ஜிவி! கைவசம் இத்தனை படங்களா?