ARTICLE AD BOX
மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கப்படுவோரில் குறைந்தபட்சம் 30 சதவீதம் போ் பெண்களாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மகாராஷ்டிரத்தில் உள்ள மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் சனிக்கிழமை பேசியதாவது:
நீதிபதிகள் அமா்வில் பன்முகத்தன்மையை அதிகரிக்க தகுதிவாய்ந்த பெண் வழக்குரைஞா்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். 45 வயதுக்குக் கீழ் உள்ள ஆண் வழக்குரைஞா்களை நீதிபதிகளாக நியமிக்க முடியும் என்றால், தகுதிவாய்ந்த பெண் வழக்குரைஞா்களை ஏன் நீதிபதிகளாக நியமிக்க முடியாது? மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கப்படுவோரில் குறைந்தபட்சம் 30 சதவீதம் போ் பெண்களாக இருக்க வேண்டும் என்றாா்.