ARTICLE AD BOX
தென்காசி ,
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகள், சைல்டு ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொல்லை அளிப்பதாக தெரிவித்தனர்.
உடனே மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு நல அலுவலர் அந்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதில், அந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த டேவிட் மைக்கேல் (வயது 37) என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அளித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஆசிரியர் டேவிட் மைக்கேலை தேடி வந்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி பகுதியில் பதுங்கியிருந்த ஆசிரியர் டேவிட் மைக்கேலை நேற்று போலீசார் கைது செய்தனர்.