அய்யனார் துணை: சோழன் சொன்ன வார்த்தை, உருகிய நிலா.. கடைசியில் நடந்த எதிர்பாராத சம்பவம்

11 hours ago
ARTICLE AD BOX

அய்யனார் துணை: சோழன் சொன்ன வார்த்தை, உருகிய நிலா.. கடைசியில் நடந்த எதிர்பாராத சம்பவம்

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் 2025 மார்ச் 17ஆம் தேதிக்கான எபிசோடில் சோழன் நிலாவிடம் ஏமாற்றி அவரை சமாதானம் செய்கிறார். அதே நேரத்தில் சோழன் வீட்டில் புது பிரச்சனை காத்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

அய்யனார் துணை சீரியலில் நிலா வீட்டுக்கு வந்த டிரைவரை திருமணம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் அவருடைய அப்பா தற்கொலைக்கு முயன்று ஹாஸ்பிடலில் இருக்கும் நிலையில் நிலாவும் சோழனும் திருவண்ணாமலைக்கு அவரை பார்க்க சென்று இருக்கிறார்கள். அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் நிலாவால் தன்னுடைய அப்பாவை பார்க்க முடியாமல் போய்விடுகிறது.

ayyanar thunai serial vijay tv

ஒதுக்கி வைக்கும் நிலா குடும்பம்

அந்த சமயத்தில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து சோழனுக்கு போன் செய்து கல்யாண சர்டிபிகேட் வாங்கிக் கொள்ள வருமாறு கூறுகின்றனர். இதனால் நிலாவும் தன்னுடன் வரவேண்டும் என்று சொன்னதால் இருக்கும் சூழ்நிலையை எப்படி சமாளிக்க என்ற குழப்பத்தில் சோழன் இருக்கிறார். அந்த நேரத்தில் நிலாவின் அண்ணன் செய்த பிரச்சனையால் நிலாவால் அங்கு இருக்க முடியாமல் மீண்டும் சோழனுடன் வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

மீண்டும் ஸ்டேஷனுக்கு

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் சோழன் நிலாவை சமாதானம் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கொண்டு வருகிறார். ஸ்டேஷனில் நம்மிடம் ஏதோ கையெழுத்து வாங்க வேண்டும் என்று கூப்பிட்டு இருக்கிறார்கள் என்று சொன்னதும் நிலாவும் அதை நம்பி வருகிறார்.

சோழன் அப்பா பிடிவாதம்

மறுபக்கத்தில் சோழன் அப்பா என்னுடைய மகன் திருமணத்தை நான் என் கண்ணால் பார்க்க வேண்டும் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். அதனால் வீட்டில் இன்னொரு ரிசப்ஷன் நடத்தலாம் என்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக நிலாவிற்கு ஜாக்கெட் தைத்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்த சோழனின் அத்தை மகள் வீட்டில் சிக்கி அடி வாங்குகிறார்.

கல்யாணம் முடிஞ்சிடுச்சு

பிறகு போலீஸ் ஸ்டேஷன் வந்த நிலாவிடம் போலீசார் சோழன் எப்படி பார்த்துக் கொள்கிறான்? எதுவும் பிரச்சனை இருக்கிறதா? என்று எல்லாம் விசாரிக்கிறார்கள். பிறகு சர்டிபிகேட்டுக்காக கையெழுத்து வாங்கி விடுகிறார்கள். அதை தொடர்ந்து நிலா இது என்ன சர்டிபிகேட் என்று கேட்கும் போது நீங்கள் இருவரும் திருமணம் செய்தற்க்கான அதிகாரப்பூர்வமான சர்டிபிகேட் இதுதான், ரெஜிஸ்டர் சர்டிபிகேட் என்று சொன்னதும் நிலா அதிர்ச்சி ஆகிறார்.

கோபத்தில் நிலா

அப்போது அந்த இடத்தில் எதுவும் பிரச்சனை ஏற்படாமல் சோழன் நிலாவிடம் சமாளித்து பேசி அங்கிருந்து கூட்டிக்கொண்டு வெளியே வருகிறார். பிறகு இருவருக்கும் சட்டபூர்வமாக திருமணம் நடந்து விட்டதாக போலீஸ் சொன்னதை கேட்டு நிலா என்ன நடக்குது? எங்க அப்பாவை சமாளிக்க தான கல்யாணம் பண்ணுனோம்? எங்களுக்கு இந்த கல்யாணமெல்லாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தனுஷுடன் நடிக்க மறுத்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. இதற்கு இதுதான் காரணமா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே
தனுஷுடன் நடிக்க மறுத்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. இதற்கு இதுதான் காரணமா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே

போலீசாரிடம் சமாளிப்பு

இதைக் கேட்ட போலீசார் சந்தேகம் அடைந்து நிலாவை தனியாக அனுப்பிவிட்டு போலீஸ் சோழனிடம் விசாரிக்கிறார்கள். அப்போது சோழன் போலீசாரிடம் நிலா இந்த காலத்து பெண் அவளுக்கு கல்யாணத்துக்கு மேல நம்பிக்கை இல்லை. லிவ்விங் ரிலேஷன்ஷிப்ல இருக்க நினைச்சாங்க அதனாலதான் இவ்வளவு கோவப்படுறாங்க என்று சமாளிக்கிறார்.

கோபப்பட்ட சோழன்

பிறகு நிலாவிடம் என் நிலைமையை யோசிச்சிங்களா? எங்க அண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல அதுக்குள்ள எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அப்போ எங்க அண்ணனுக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு நினைக்க மாட்டாங்களா? அது எங்க அண்ணனுடைய வாழ்க்கையை பாதிக்காதா? உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்த எனக்கு ஏங்க இதெல்லாம் நடக்கணும் என்று கோபப்படுவது போன்று பேசிவிட்டு காருக்கு போய்விடுகிறார்.

 எழில், செழியனுக்கு ஏற்பட்ட சண்டை.. ஈஸ்வரி எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் பாக்யா
பாக்கியலட்சுமி: எழில், செழியனுக்கு ஏற்பட்ட சண்டை.. ஈஸ்வரி எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் பாக்யா

சீரியல் நேரம் மாற்றம்

பிறகு நிலா சமாதானமாகி சோழனிடம் சாரி கேட்கிறார். அப்போது தனக்கு நிலாவுடன் திருமணம் செய்து வைத்து சட்டபூர்வமாக பதிவு செய்து சர்டிபிகேட் தந்த போலீசாரின் பெயரை தன் குழந்தைக்கு வைப்பேன் என்று அவரிடம் ஐஸ் வைத்துவிட்டு சோழன் வருகிறார். அதுபோல அய்யனார் துணை சீரியல் இதுவரைக்கும் விஜய் டிவியில் 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் இன்று முதல் அந்த சீரியல் 8:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது இதுவரைக்கும் 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
English summary
ayyanar thunai serial episode ( அய்யனார் துணை எபிசோடு): Cholan deceives him in the episode on March 17, 2025 at the ayyanar thunai Serial, which is aired on Vijay TV. At the same time, the new problem is waiting for Chola's house. Let us see in detail what happened.
Read Entire Article