டாப் சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி.. இனி இவருக்கு பதில் இவர்தான்! எதிர்பாராத திருப்பம்

10 hours ago
ARTICLE AD BOX

டாப் சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி.. இனி இவருக்கு பதில் இவர்தான்! எதிர்பாராத திருப்பம்

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று இதயம். ரிச்சர்ட், ஜனனி அசோக் குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்து வரும் திங்கள் முதல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இரண்டாவது பாகத்தில் ஜனனி அசோக்குமாருக்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த சமயத்தில் இரண்டாம் பாகத்தில் பாரதியாக ஜனனி அசோக் குமார் தொடரப்போவதில்லை என்பதை அவரே அறிவித்துள்ளார். ஆமாம் தனது அடுத்தகட்ட பயணத்திற்காக இதயம் சீரியலில் இருந்து வெளியேறுவதாகவும் தன்னை பாரதியாக ஏற்று கொண்டவர்களுக்கும் தனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த சேனலுக்கும் அவர் நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Zee Tamil idhayam Serial

இனி பாரதி இவர்தான்

இதனால் இதயம் சீரியலில் பாரதியாக நடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது, தெலுங்குவில் பிரபல சீரியல் ஒன்றில் ரிச்சர்ட்டுடன் இணைந்து நடித்துள்ள பல்லவி கௌடா என்ற நடிகை இதயம் சீரியலில் மீண்டும் ரிச்சர்ட்டுடன் ஜோடி சேர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரணத்தை வென்ற காதல்

அதுபோல இதயம் சீரியலில் முதல் பாகத்தின் ஆரம்பத்திலேயே பாரதி மற்றும் ஆதிக்கு என்று அதிகமான ரசிகர்கள் உருவாக்கி விட்டனர். பாரதியின் கணவர் விபத்தில் இறந்து போக அவருடைய இதயத்தை ஆதிக்கு வைத்திருக்கும் நிலையில் ஆதி பாரதி மற்றும் அவருடைய குழந்தையின் மீது அளவு கடந்த பாசம், காதலை வைத்து இருக்கிறார்.

Zee Tamil idhayam Serial

பாரதியின் தவறான புரிதல்

ஆனால் எதிர்பாராத சூழ்நிலையில் ஆதி மற்றும் பாரதிக்கு திருமணம் நடைபெறுகிறது. அதற்குப் பிறகு தன்னுடைய அம்மாவின் இறப்பிற்கு காரணம் பாரதி என்று நினைத்துக் கொள்ளும் ஆதி அதனால் பாரதியை பிரிந்து விட்டார். இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

 சோழன் சொன்ன வார்த்தை, உருகிய நிலா.. கடைசியில் நடந்த எதிர்பாராத சம்பவம்
அய்யனார் துணை: சோழன் சொன்ன வார்த்தை, உருகிய நிலா.. கடைசியில் நடந்த எதிர்பாராத சம்பவம்

எதிர்பாராத திருப்பம்

பாரதியும் ஆதியும் சேர்ந்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வந்தனர். அந்த நேரத்தில் ஆதி தன்னுடைய நினைவுகளை எல்லாம் அழிக்கும் சிகிச்சை எடுத்துவிட்டு வெளிநாட்டிற்கு போவதற்கு முயற்சி செய்து இருந்தார். மீண்டும் ஆதிக்கு பாரதி மற்றும் குழந்தை மீது இருக்கும் பாசம் வெளிப்படுகிறது இல்லையா என்பது பற்றி கதை நகர்ந்து கொண்டிருந்தது.

தனுஷுடன் நடிக்க மறுத்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. இதற்கு இதுதான் காரணமா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே
தனுஷுடன் நடிக்க மறுத்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. இதற்கு இதுதான் காரணமா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே

குறைந்த டிஆர்பி

ஆனாலும் இந்த சீரிலின் டிஆர்பி வெகுவாக குறைந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக இந்த சீரியலை முடித்துவிட்டு புதிய பொலிவுடன் இரண்டாவது பாகம் தொடங்க இருக்கிறார்கள். இதில் கதாநாயகியாக நடித்து வந்த ஜனனி நடிக்கவில்லை என்றதும் அவருடைய ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள்.

ஜனனியின் திடீர் முடிவு

ஆரம்பத்தில் பல சீரியல்களில் ஜனனி குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தாலும் இதயம் சீரியல் மூலமாக அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருந்தனர். இப்போது இவர் சீரியலில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த கட்ட பயணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
English summary
idhayam Serial: One of the leading television channels in the Tamil film is Zee Tamil. The heart is one of the most popular serials that are broadcast on this channel. It has been reported that the first part of the serial, which is playing the lead roles, including Richard and Janani Ashok Kumar, will be aired from Monday. In the second part, it is reported that Janani Ashok Kumar is going to replace it.
Read Entire Article