ARTICLE AD BOX
அம்பானி மகன் திருமணம்.. வைரத்தை தொலைத்த பிரபல நடிகை.. பல லட்சம் நஷ்டம்.. வெளியான சீக்ரெட்
மும்பை: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி. அவரது மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் திருமணம் நடந்தது. அவர் ராதிகா மெர்ச்சன்ட்டை திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இந்திய பிரபலங்கள் முதல் உலக பிரபலங்கள்வரை கலந்துகொண்டார்கள். இந்தச் சூழலில் அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டது குறித்து பிரபல நடிகை கிம் கதார்ஷியன் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்தியாவில் நம்பர் ஒன் பணக்காரராக திகழ்பவர் முகேஷ் அம்பானி. ஏகப்பட்ட தொழில்களை செய்துவரும் அவர் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிவைத்திருக்கிறார். அவரது தந்தையின் தொழில்களை ஆரம்பத்தில் கவனிக்க ஆரம்பித்தாலும் இப்போது ரிலையன்ஸ் குழுமத்தை உச்சாணி கொம்பில் நிறுத்தி வைத்திருக்கிறார். அவருக்கு ஆனந்த் அம்பானி என்கிற மகன் இருக்கிறார். அவரும் முகேஷ் அம்பானிக்கு துணையாக பிஸ்னெஸில் கவனம் செலுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்ட திருமணம்: சூழல் இப்படி இருக்க அம்பானியின் மகனான ஆனந்த்துக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. அவர் ராதிகா மெர்ச்சன்ட்டை திருமணம் செய்துகொண்டார். ப்ரீ வெட்டிங் நிகழ்வையே சொகுசு கப்பலில் நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருமண விழா மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற்றன. அதாவது திருமண விழா, சுப ஆசீர்வாத் நிகழ்வு, மங்கல் உத்சவ நிகழ்வு என அவை பிரிக்கப்பட்டிருந்தன. மகனின் திருமணத்துக்காக மட்டும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
குவிந்த நட்சத்திரங்கள்: இந்தத் திருமணத்தில் பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட்டை சேர்ந்த திரை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். தமிழிலிருந்து ரஜினிகாந்த், நயன்தாரா, சூர்யா, ஜோதிகா, அட்லீ என பலர் கலந்துகொண்டார்கள். அதேபோல் பாலிவுட்டை சேர்ந்த முக்கால்வாசி நட்சத்திரங்களும் கலந்துகொண்டார்கள். மகனின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கை கடிகாரத்தை கிஃப்ட்டாக வழங்கி திக்குமுக்காட வைத்தார். இந்த ஆடம்பர திருமணத்தை பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் மூக்கின் மேல் விரலை வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிம் கதார்ஷியன் பேட்டி: இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டது பற்றி ஹாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகை கிம் கதார்ஷியன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது. தனது அக்கா க்ளோய் கதார்ஷியனுடன் அந்தப் பேட்டியில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசிய க்ளோய் கதார்ஷியன், "முகேஷ் அம்பானி யார் என்றே எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு தெரிந்த பொதுவான நண்பர்கள் இருக்கிறார்கள்.
வருவோம் என்று உறுதியளித்தோம்: அதில் ஒருவர்தான் நகை வடிவமைப்பாளர் லோரைன் ஷ்வார்ட்ஸ், அவர்தான் அம்பானியின் மகனுடைய திருமணத்துக்கான நகைகளை டிசைன் செய்தார். அவர் மூலமாகத்தான் அம்பானி குடும்பம் எங்களை தொடர்புகொண்டார்கள். திருமணத்துக்கு அழைத்தால் வருவீர்களா என்று கேட்டார்கள். நாங்கள் கண்டிப்பாக வருவோம் என்று கூறினோம். அதனைத் தொடர்ந்து எங்கள் வீட்டுக்கு ஆனந்த் அம்பானியின் திருமண பத்திரிகை வந்தது. அந்தப் பத்திரிகை 20 கிலோவரை வெயிட்டாக இருந்தது. அவ்வளவு கிராண்டாக இருந்தது. எப்படி போகாமல் இருக்க முடியும்" என்றார்.
குட் பேட் அக்லி முதல் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. பட்டையை கிளப்பும் டீசர் மேக்கிங் வீடியோ
கிம் கதார்ஷியனின் வைரம்: அவரைத் தொடர்ந்து பேசிய கிம் கதார்ஷியன், "அம்பானியின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டபோது வைர நெக்லஸில் இருந்து ஒரு வைரம் கீழே விழுந்து தொலைந்துவிட்டது. எங்கே விழுந்து என்று தெரியவில்லை. தீவிரமாக தேடியும் அது கிடைக்கவில்லை. அந்த வைரத்தின் மதிப்பு பல லட்சம் ரூபாய்வரை இருக்கும். அது எனக்கு ரொம்பவே கஷ்டமாக அமைந்துவிட்டது" என்றார்.