ARTICLE AD BOX
வடிவேலு அரசியல் மேடையில் கால் வைத்ததிலிருந்து சினிமா கேரியர் அவருக்கு பெரிய அடியாக அமைந்தது. இப்பொழுது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துவிட்டார். மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். அடுத்தடுத்து அவர் கையில் 4,5 படங்கள் இருக்கிறது.
உதயநிதியுடன் இணைந்து அவர் நடித்த படம் மாமன்னன். இந்த படம் அவருக்கு பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. காமெடி அல்லாது குணச்சித்திர வேடத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார். இந்த கதாபாத்திரம் வடிவேல் தான் பண்ண வேண்டும் என மாரி செல்வராஜ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உதயநிதி வடிவேலுவிடம் பேசி நடிக்க வைத்தார்.
மாமன்னன் படத்துக்குப் பிறகும் அவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை. சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் மட்டும் நடித்திருந்தார். அந்த படமும் சரியாக போகவில்லை. பெரிதும் மன வேதனையில் இருந்த அவர் இப்பொழுது சுந்தர் சி கூட்டணியில் கேங்கர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வடிவேலு நான்கு கெட்டபில் தோன்றுகிறார். மீண்டும் அவரது நகைச்சுவை இந்த படத்தில் பெரிதும் பேசப்படும் என்கிறார்கள். இதுபோக வடிவேலு கைவசம் நான்கு படங்கள் வைத்திருக்கிறார். ஏற்கனவே மாரீசன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படங்களுக்குப் பிறகு நடிகர் கார்த்தியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார். அந்த படமும் முழு நீள காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டானாகாரன் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கப் போகும் இந்த படம் அடுத்த மாதம் சூட்டிங் ஆரம்பிக்கவிருக்கிறது.