ARTICLE AD BOX
மணிகண்டன் அடுத்த விஜய் சேதுபதி.. 100 ஸ்கிரிப்ட் இருக்கு.. யார் சொன்னா தெரியுமா?
சென்னை: குடும்பஸ்தன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும், வடசென்னை 2வில் மணிகண்டன் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இதுகுறித்து எந்த அப்டேட்டும் தரவில்லை. இந்நிலையில், மணிகண்டன் குறித்து விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி தெரிவித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் மணிகண்டன் இப்படிப்பட்டவரா என்றும் வியக்க தொடங்கியுள்ளனர்.
எட்டு தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா போன்ற படங்களில் கேரக்டர் நடித்து வந்த மணிகண்டன் விக்ரம் வேதா படத்திற்கு அவரே வசனம் எழுதியிருப்பார். இவரது இயக்கத்தில் வெளியான நரை எழுதும் சுயசரிதம் என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பார்க்க பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் மணிகண்டனை பலரும் தமிழ் சினிமாவிற்கு எதார்த்தமான நடிகர் கிடைத்து விட்டார் என்றும் புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால், மணிகண்டனுக்கு புகழ்ச்சியே பிடிக்காதாம்.
கமல் ரசிகன்: மணிகண்டன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், பேட்டிகளில் ஒரு படத்தை பற்றி புரிந்துகொள்ளும் தன்மையை கண்டு ரசிகர்களே வியந்து பார்க்கின்றனர். மேலும், மணிகண்டன் கமலின் ரசிகன் என்று பல மேடைகளில் தெரிவித்திருப்பார். ஆனால், பிற நடிகர்களோடு ஒப்பிடாமல் அவரவர் திறமையை உணர்ந்து மணிகண்டன் பேசும் நேர்காணல்கள் ரசிக்கும் வகையிலேயே உள்ளன. அவர் பார்த்து ரசித்த படங்களின் கதையை விளக்கும் போது பெரும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
நட்பு: புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியாகியுள்ள சுழல் 2 வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஓடிடி பார்ப்பவர்களுக்கு பிடித்த வெப் தொடராகவும் இருக்கிறது. இதுகுறித்த அனுபவத்தை பல்வேறு யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வருகின்றனர். அப்போது விக்ரதம் வேதா படத்தில் மணிகண்டன் எழுதிய வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரது வேலையும் புஷ்கர் - காயத்ரிக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். இ்ப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து தற்போது இருக்கும் நட்பு குறித்தும் பகிர்ந்துள்ளார்.

100 ஸ்கிரிப்ட்: மணிகண்டன் சாதாரணமான ஆள் இல்லைங்க, அவருக்கு ஒரு கதை பிடிக்கலைனா பிடிக்கலை என்பதில் தெளிவாக இருப்பார். எப்படியும் 100 ஸ்கிரிப்ட் கேட்பாருங்க. சலிக்காம சினிமாவை பற்றி யோசிப்பது, சினிமா அவர் ரத்தத்தில் ஊறி போய் கிடக்கிறது. புது இயக்குநர்கள், பிரபலமான இயக்குநர்கள் என்று பிரித்து பார்க்காமல் கதை கேட்பாரு. சாதாரணமா டீ கடையில் அமர்ந்து புது இயக்குநர்கள் கிட்ட கதையை கேட்டு பிடித்திருந்தால் படம் பண்ணலாம்னு சொல்லுவார் என புஷ்கர் - காயத்ரி தெரிவித்துள்ளனர்.

அடுத்த விஜய் சேதுபதி: ரொம்ப எதார்த்தமா பழகக் கூடியவர், சினிமாவில் மட்டும் ரியல் வாழ்க்கையிலும் மணிகண்டன் அப்படித்தான் இருப்பாரு என புஷ்கர் தெரிவித்தார். அப்போது பேசிய காயத்ரி, விஜய் சேதுபதி மாதிரி மணிகண்டன் நடிக்கும் படங்கள் எல்லாமே புது இயக்குநர்கள் தான். மணிகண்டனை அடுத்த விஜய் சேதுபதி என்று கூட சொல்லலாம். அவர் உதவி இயக்குநராக இருந்ததால், கதை கேட்டு முடிவெடுப்பதில் கில்லி. கதை புரிந்துகொள்ளும் தன்மையும் அவர்கிட்ட இருக்கு. பெரிய தயாரிப்பாளர், பெரிய இயக்குநர் என்றால் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. காலப்போக்கில் மாறலாம் என புஷ்கர் காயத்ரி தெரிவித்தனர்.