ARTICLE AD BOX
சென்னையில் உள்ள அம்பத்தூர், ஆசிரியர் காலனி பகுதியில் வசித்து வருபவர் ராஜ். இவரின் மகன் தினேஷ் பாபு (வயது 45), பேட்மிட்டன் பயிற்சியாளர், கட்டிட காண்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறார்.
அம்பத்தூரில் உள்ள தாசில்தார் அலுவலகம் பகுதியில், பேட்மிட்டன் மையத்திற்கு தினமும் காலை, மாலை வேளைகளில் பயிற்சிக்கு சென்று வருவது வழக்கம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரௌடியை கொன்றது ஏன்? 5 ஆண்டு பகைக்கு பழிதீர்த்து முற்றுப்புள்ளி வைத்த பயங்கரம்.! கத்தி எடுத்து கத்தியால் அழிந்த துயரம்.!
இதனிடையே, நேற்று மாலை சுமார் 4 மணியளவில் பேட்மிட்டன் பயிற்சி மையத்திற்கு, வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அச்சமயம், ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்தது.
பரிதாப பலி
4 பேர் கும்பல் தினேஷை சற்றும் எதிர்பாராத நேரத்தில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பிச் சென்றது. இதனால் தினேஷ் பாபு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தினேஷ் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை: 5 ஆண்டு பகைக்கு பழிதீர்த்து இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ்.. ரௌடியை கொலை செய்து பயங்கரம்.!