மதுரை விமான நிலையம்: பயணிகள் எண்ணிக்கையில் புதிய சாதனை!

2 hours ago
ARTICLE AD BOX

மதுரை விமான நிலையம் பயணிகள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 1,16,539 பயணிகள் பயணித்துள்ளனர், இது கடந்த ஆண்டை விட 45% அதிகம். விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் புதிய சேவைகள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இது, பண்பாட்டு மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரமாகவும் பரவலாக அறியப்படுகிறது. இந்த நகரம் சினிமா, வர்த்தகம், கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுலா துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

மதுரை விமான நிலையம் வேகமாக வளர்ந்து வரும் விமான நிலையங்களில் ஒன்றாகவும் உள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையை பொருத்தவரை, மதுரை விமான நிலையம் ஒரு மணி நேரத்திற்கு 700 பயணிகளை வரவேற்கின்றது. வருடத்திற்கு 1.50 மில்லியன் பயணிகள் (15 லட்சம்) இதனைப் பயன்படுத்துகின்றனர். வாரத்திற்கு 140 விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பயணிகள் எண்ணிக்கையில் மதுரை விமான நிலையம் புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 1,16,539 பயணிகள் பயணித்துள்ளனர். இது 2024 ஜனவரி உடன் ஒப்பிடும் போது 45% அதிகமாகும். கடந்த ஆண்டு ஜனவரியில் 80,603 பயணிகள் மட்டுமே பயணித்திருந்தனர்.

மதுரை விமான நிலையம், தமிழகத்தின் மூன்றாவது பெரிய விமான நிலையமாகவும் கருதப்படுகிறது. இது சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகரங்ளுக்கு சேவைகளை வழங்குகிறது. அதேவேளை, சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் போன்ற வெளிநாட்டு நகரங்களுக்கும் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.

மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.. மதுரை நகரம் வணிகத் தளமாகவும் மாறி வருகிறது. திருமலைநாயக்கர் மாளிகை போன்ற சுற்றுலா தலங்கள் அதிகமான பயணிகளை ஈர்க்கின்றன. மேலும், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பெருமளவில் உள்ளதால், விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த விமான நிலையத்தில், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது பயணிகளுக்கு வேலை, கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுலாவிற்காக உதவுகிறது. மேலும், வெளிநாட்டு நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற இடங்களுக்கும் விமான சேவைகள் உண்டு, இது வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பயண வசதிகளை அதிகரிக்கின்றது.

விமான நிலையத்தில் பயணிகளுக்கான பல வசதிகள் உள்ளன: உணவகம், காபி ஷாப், டாக்சி வசதி, தனியார் லவுஞ்ச், வணிகக் கூடங்கள் மற்றும் பல. தற்போது, மதுரை விமான நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்கின்றன. புதிய ரன்-வே கட்டுமானம் விமான தரிப்பு மற்றும் புறப்படுவதை வேகமாக செய்ய உதவும். இதன் மூலம், புதிய சர்வதேச விமான சேவைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.

மதுரை விமான நிலையத்தில் லண்டன், பாங்காக், ஆஸ்திரேலியா, கனடா போன்ற இடங்களுக்கு நேரடி சர்வதேச விமான சேவைகள் தொடங்குவதற்கான திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேம்பட்ட சோதனை கருவிகள், பயணிகள் சோதனை மையங்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் விரிவாக்கப்படுகின்றன.

மதுரை விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு அதிக விமான தரிப்பு, கூடுதல் காத்திரிப்பு அறைகள் மற்றும் பயணிகள் கவுண்டர்கள் போன்ற வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே தொழில்நுட்பம் மற்றும் வசதிகளில் முன்னேற்றங்களை செய்யும் மூலம், மதுரை விமான நிலையம் சர்வதேச பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article