அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50,000 அபராதம்..! மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

3 days ago
ARTICLE AD BOX

அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50,000 அபராதம்..! மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்கராவ் கோகடே என்பவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் ₹50,000 அபராதமும் விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாணிக்கராவ் கடந்த 1995ஆம் ஆண்டு, அடுக்குமாடி குடியிருப்புகளை பெறுவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் மீது குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பின் படி, அமைச்சர் மாணிக்கராவ் அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ₹50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாசிக் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளை பெறுவதற்கு,   தங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை என்பது உள்பட சில பொய்யான காரணங்களை கூறி வீடுகளைப் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, மாணிக்கராவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Edited by Siva
Read Entire Article