அப்படி போடு.. Pro Max மாடலுக்கு குட்பை சொல்லும் Apple.. இனிமேல்?

17 hours ago
ARTICLE AD BOX

அப்படி போடு.. Pro Max மாடலுக்கு குட்பை சொல்லும் Apple.. இனிமேல்?

News
oi-Muthuraj
| Published: Sunday, March 16, 2025, 14:28 [IST]

நேவர் பிளாக் (Naver Blog) வழியாக கிடைத்துள்ள ஒரு சமீபத்திய தகவலின்படி, ஆப்பிள் நிறுவனமானது அதன் ஐபோன் சீரீஸில் உள்ள ப்ரோ மேக்ஸ் (Pro Max) மாடல்களுக்கு குட்பை சொல்ல உள்ளது. அதாவது ஐபோன் 16 சீரிஸ் மற்றும் அதற்கு முந்தைய சீரீஸ்களில் அறிமுகமான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்-ஐ போல.. ஐபோன் 17 சீரீஸில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என்கிற மாடல் அறிமுகம் செய்யப்படாது.

மாறாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 அல்ட்ரா (iPhone 17 Ultra) என்கிற மாடலை அறிமுகம் செய்யும். சப்ளை செயின் மார்க்கெட் பகுப்பாய்வின்படி (Supply chain market analysis), ஆப்பிள் நிறுவனம் புதிய வன்பொருள் அம்சங்களை (New Hardware Features) கொண்ட ஒரு ஐபோன் மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. உதாரணமாக, ஐபோன் 17 அல்ட்ரா மாடலில் ஒரு சிறிய டைனமிக் ஐலேண்ட் (Small Dynamic Island) இடம்பெறலாம்.

அப்படி போடு.. Pro Max மாடலுக்கு குட்பை சொல்லும் Apple.. இனிமேல்?

மேலும் ஐபோன் 17 சீரிஸில் ஐபோன் 17 அல்ட்ரா மாடல் மட்டுமே வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டமை (vapor chamber cooling system) ஏற்றுக்கொள்ளும் என்றும், இது கடந்த ஆண்டு அறிமுகமான ப்ரோ மேக்ஸ் மாடலை விட பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது ஐபோன் 17 அல்ட்ரா சற்றே தடிமனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

மேலும் கணிசமான வன்பொருள் மேம்படுத்தலுடன் வரும் ஐபோன் 17 அல்ட்ராவின் விலை நிர்ணயம் - நிச்சயம் அதிகமாகவே இருக்கும்; இது ஆப்பிளின் லாப வரம்புகளை அதிகரிக்கவும் உதவும். இருப்பினும் நமக்கு கிடைத்த இந்த அறிக்கை சரியானதா அல்லது வெறும் யூகம் மட்டும் தானா என்பதை - இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது.

ஆப்பிளை போலவே சாம்சங் நிறுவனமும் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸில் புதிய மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) ஸ்மார்ட்போன் ஆகும். இது மிகவும் ஸ்லிம் ஆன மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் பிரீமியம் அம்சங்களை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மற்ற கேலக்ஸி எஸ்25 சீரீஸை போல இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படுமா என்கிற சந்தேகத்தை தீர்க்கும் படியான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது பிஐஎஸ் சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது.

பிஐஎஸ் என்பது இந்திய தர நிர்ணய ஆணையம் ஆகும். பொதுவாக பிஐஎஸ் தளத்தை கடந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் உடனடி அறிமுகத்தை காண்பது வழக்கம். சாம்சங்கின் புதிய எட்ஜ் மாடல் ஆனது SM-S937B/DS என்கிற மாடல் நம்பரின் கீழ் பிஐஎஸ் தளத்தில் காணப்பட்டுள்ளது. ஆக இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்திய சந்தையில் (ஏப்ரல் மாத வாக்கில்) அறிமுகம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்?
- டூயல் சிம் ஆதரவு
- 5.84 மிமீ தடிமன்
- சுமார் 162 கிராம் எடை
- 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- 6.6-இன்ச் AMOLED டிஸ்பிளே

- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 3,900mAh பேட்டரி
- 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- விலை சுமார் ரூ.80,000 - ரூ,90,000 க்குள் இருக்கலாம்

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Apple iPhone 17 Ultra to replace iPhone 17 Pro Max with new hardware features Report
Read Entire Article