அனுபவத்தில் சொல்லுறேன்..ரசிகர்கள் வேற.. வாக்காளர்கள் வேற! ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

3 days ago
ARTICLE AD BOX
kamalhasan

சென்னை : நடிகர் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கி தான் அரசியல் வருவதாக அறிவித்தார். இந்த கட்சி தொடங்கப்பட்டு நேற்றுடன் 8-ஆண்டுகள் ஆகிய நிலையில், இதனை கொண்டாடும் விதமாக சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பல விஷயங்களை பேசினார்.

இதுகுறித்து பேசிய அவர் ” நான் தோல்வி அடைந்த அரசியல்வாதி என பலரும் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வரத் தவறியதைத்தான் என்னுடைய தோல்வியாக நான் பார்க்கிறேன் அப்படி வந்திருந்தால், நான் பேசும் பேச்சும், இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும்.

அதைப்போல, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என் அனுபவத்தில் நான் புரிந்துகொண்டது ரசிகர்கள் வேறு.. வாக்காளர்கள் வேறு. நான் அரசியலுக்கு வந்த பிறகு இதனை தெரிந்துகொண்டேன்” எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து

மாணவர்கள் தான் நாளைய தமிழகம். அவர்களுக்கு என்ன இஷ்டமோ அதை தான் கற்றுக்கொடுக்க வேண்டும். நான் சொல்வதை தான் கற்றுக்கொள் வேண்டும் இல்லை என்றால் காசு தரமாட்டேன் எனக் கூறும் அரசுக்கு மக்கள், நாளைய தலைமுறை பதில் சொல்வார்கள். மாற்றத்திற்கு உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தகுதி கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கிறது” எனவும் பேசினார்.

அதன்பின், இந்தி திணிப்பு விவகாரம் குறித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” இந்தித் திணிப்பை தடுத்தவர்கள் தமிழர்கள். மொழிக்காக உயிரையே கொடுத்த மக்கள் தமிழ்நாட்டு மக்கள். தனக்கு எந்த மொழி வேண்டும், எது தேவை என்பதை முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு. தமிழ் மொழி பெருமையை யாராலும் இறக்க முடியாது. இதனை இக்காட்டான காலம் என சொல்ல மாட்டேன் . இதனை தமிழ்நாடு முன்னரே பார்த்துவிட்டது.

Read Entire Article