ARTICLE AD BOX

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 40 வருடங்களுக்கு மேலானாலும் இன்றளவும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் வெற்றியின் மூலமாக மீண்டும் வெற்றி பெற ரஜினி அடுத்ததாக வேட்டையன் படத்திலும் நடித்தார். இந்த படமும் வணிக ரீதியாக வசூலை பெற்றது. இதனை தொடர்ந்து கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஜெயிலர்-2படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அடுத்தடுத்து பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் ரஜினி அதிகம் முறை பார்த்த படங்கள் என்ன என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது அதில் பேசிய ரஜினி, “நான் அடிக்கடி மூன்று படங்களை பார்ப்பேன். ஒன்று கார்ட் பாதர், அதனை தொடர்ந்து திருவிளையாடல், இன்னொன்னு ஹே ராம். ஹேராம் படத்தை 40 முறைக்கு மேல் பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறையும் படத்தை பார்க்கும் போது எனக்கு புதிதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.