அதிவேகத்தில் நடந்த பயங்கரம்.. 5 பேர் உடல் நசுங்கி பலி.. அப்பளமாக நொறுங்கிய கார்.!

3 hours ago
ARTICLE AD BOX

 

தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக பயணம் ஐவரின் உயிருக்கு எமனாக அமைந்த சோகம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், வித்ராயணபுரா பகுதியில் வசித்து வருபவர் சாந்தமூர்த்தி (வயது 60). இவர் கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துத்துறையில் ஓட்டுனராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் ஆவார். 

இதையும் படிங்க: தமிழக ஓட்டுனருக்கு ஆதரவாக, அதிகாரிகளை காரித்துப்பி கடிந்துகொண்ட கர்நாடக சமூக ஆர்வலர்.. லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி.!

இவரின் நண்பர்கள் ருத்திர சாமி (வயது 60), மல்லிகார்ஜுன (வயது 50), சாந்த மூர்த்தி (வயது 55), சீனிவாஸ் (வயது 55), சிதம்பரம் ஆசாரி (வயது 53). இவர்கள் அனைவரும் நேற்று பெங்களூரில் இருந்து, சித்ரதுர்கா பகுதிக்கு சென்றுள்ளனர். 

அங்கு எல்லம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்தவர்கள், நேற்று அதிகாலை நேரத்தில் காரில் மீண்டும் பெங்களூர் நோக்கி பயணம் செய்தனர். 

விபத்தில் சிக்கி சோகம்

கார் சவதத்தி பகுதியில் வந்தபோது, சாலையோரம் நின்ற லாரியின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் அப்பளம் போல கார் நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்த ஐவர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

மேலும், ஒருவர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிருக்கு போராடியவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கார் ஓட்டுனரின் அதிவேகம் விபத்துக்கு காரணமாக அமைந்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க: "நீ குண்டா இருக்க, வரதட்சணை வாங்கிட்டு வா" - மனைவி மீது மிளகாய்பொடி தாக்குதல் நடத்தி கொடுமை செய்த கணவன்.!

Read Entire Article