ARTICLE AD BOX
ஹேம்நாத் நாராயணன் இயக்கிய மர்மர் என்கிற திகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டையாடி வருகிறது.

MurMur Box Office Collection : ஹேம்நாத் நாராயணன் இயக்கிய மர்மர் திரைப்படம் கம்மியான திரையரங்கில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது அதற்கான திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போது மவுசு உண்டு. இதன் காரணமாக தான் தமிழில் பிரான்சைஸாக வெளிவந்த பெரும்பாலான படங்கள் பேய் படங்களாக உள்ளன. உதாரணத்திற்கு சுந்தர் சி தன்னுடைய அரண்மனை படத்தை இதுவரை நான்கு பாகங்கள் எடுத்துவிட்டார். அதேபோல் நடிகர் ராகவா லாரன்ஸ், தன்னுடைய காஞ்சனா படத்தை மூன்று பாகங்கள் எடுத்து வெற்றிகண்ட நிலையில், தற்போது அதன் நான்காம் பாகத்தை எடுத்து வருகிறார்.
கிங்ஸ்டன் போட்டியாக வந்த மர்மர்
ரசிகர்கள் மத்தியில் பேய் படங்களுக்கு இருக்கும் மவுசை கருத்தில் கொண்டு தற்போது தமிழில் வெளியாகி இருக்கும் திகில் படம் தான் மர்மர். இப்படத்தை ஹேம்நாத் நாராயணன் இயக்கி உள்ளார். காட்டுக்குள் பேயா? சூனியக்காரியா? என தேடி போகும் டீம்! கடைசியில் என்ன ஆனது? என்பது தான் மர்மர் படத்தின் சுருக்கமான கதை. இப்படம் கடந்த மார்ச் 7-ந் தேதி ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் படத்துக்கு போட்டியாக திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்... ஜிவி-யின் கடல் சாகசமாக வெளியான 'கிங்ஸ்டன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் இதோ!
மர்மர் படத்திற்கு அதிக ஸ்கிரீன்கள் ஒதுக்கீடு
ஆரம்பத்தில் மர்மர் படத்திற்கு வெறும் 100 ஸ்கிரீன்கள் தான் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் படத்தை பற்றி பாசிடிவ் விமர்சனங்கள் பரவியதால், இப்படத்தின் ஸ்கிரீன் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 300க்கு மேல் அதிகரிக்கப்பட்டது. இதனால் தமிழ் நாட்டில் சைலண்ட் ஹிட் படமாக மர்மர் மாறி வருகிறது. இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் மர்மர்
அந்த வகையில் மர்மர் திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்றே நாட்களில் ரூ.2.5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாம். பெரியளவில் நட்சத்திர பட்டாளம் இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இதற்காக ஸ்கிரீன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாம். இந்தப் படத்தோடு ஒப்பிடுகையில் ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் படம் கம்மியான வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 2025-ல் வெளியான 45 படங்களில் வெறும் 4 தமிழ் படங்கள் தான் ஹிட்! லிஸ்ட்ல விடாமுயற்சி இருக்கா?