ARTICLE AD BOX
IPL 2025: நெருக்கடியில் ஐபிஎல் தொடர்., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. 17 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இத்தொடரின் 18 வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. அதன்படி வரும் மார்ச் 22ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. தற்போது ஐபிஎல் தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மது மற்றும் புகைப்பிடித்தல் தொடர்பான விளம்பரங்களை போட்டியின் போதும், விளம்பரங்களின் போதும் ஒளிபரப்பக் கூடாது என ஐபிஎல் நிர்வாகத்திற்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாட்டில் ஏற்படும் 70% மரணங்கள், போதைப்பொருட்களுக்கு அடிமையாவதாலே ஏற்படுவடுதால் இந்த நடவடிக்கை என விளக்கம் அளித்துள்ளது.
The post IPL 2025: நெருக்கடியில் ஐபிஎல் தொடர்., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! appeared first on EnewZ - Tamil.