ARTICLE AD BOX
சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.. இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும்.. இந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.. எனினும் சூரியனுடன் ஒப்பிடும் போது நிலவின் அளவு மிகவும் சிறியது என்பதால், நிலவால் சூரியனை மறைக்க முடியாது.. எனவே சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது, நிலவை சூரியன் மறைத்திருப்பதால் பார்ப்பதற்கு நெருப்பு வளையம் போல சூரியன் தோற்றமளிக்கும்..
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29 அன்று நிகழ உள்ளது. இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும், இது சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கும் என்று கூறப்படுகிறது..
மார்ச் 29 அன்று, சூரிய கிரகணம் பிற்பகல் 2:20 (IST) மணிக்குத் தொடங்கி மாலை 6:13 மணிக்கு முடிவடையும், இது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும். கிரகணம் மாலை 04:17 மணிக்கு உச்சத்தை அடையும் என்று நாசா தெரிவித்துள்ளது.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து சூரிய கிரகணம் தெரியும். ஆனால் இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது.
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். ஆனால் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்க்கக்கூடாது. இது விழித்திரை தீக்காயங்கள் மற்றும் மீளமுடியாத கண் சேதத்தை ஏற்படுத்தும். சூரிய கிரகணத்தைக் பார்க்கும் போது, பொருத்தமான கண் பாதுகாப்பு அணிவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் 2 சூரிய கிரகணங்கள் நிகழும் என்று நாசா கணித்துள்ளது. முதலாவது மார்ச் 29 ஆம் தேதி நிகழும் என்றும், இரண்டாவது சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி நிகழ வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதே போல் இந்த ஆண்டு, 2 சந்திர கிரகணங்களும் நிகழும். முதலாவது மார்ச் 14 ஆம் தேதி ஹோலி பண்டிகையுடன் இணைந்து நிகழும். இது காலை 09:29 மணிக்கு தொடங்கி பிற்பகல் 03:39 மணிக்கு முடிவடையும்.
இந்த நிகழ்வு 1 மணி நேரம் நான்கு நிமிடங்கள் நீடிக்கும். கிரகணம் மதியம் 12:29 மணிக்கு உச்சத்தை எட்டும். இந்த வான நிகழ்வை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது.
இந்த சந்திர கிரகணத்தின் போது நிலவு சிவப்பு நிறமாக இருக்கும். சூரியன் மற்றும் சந்திரனுக்கு நேர் முன்னால் பூமி செல்லும் போது நிகழ்கிறது. அதாவது இந்த நேரத்தில் சூரியனின் ஒளி, நிலவின் மீது விழாது. ஆனால் பூமி மீது விழுந்து நிலவுக்கு விருந்தளிக்கும். இதனால் சந்திரனுக்கு சிவப்பு நிறம் தோன்றும். இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 7, 2025 அன்று நிகழும்.
Read More : கலியுகம் எப்படி இருக்கும்..? எப்படிப்பட்ட மக்கள் வாழ்வார்கள்..? பிரபல சாமியாரின் பகீர் கணிப்புகள்..
The post 2025-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்த மாதம் நிகழும்.. இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா..? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.