அதிமுகவுடன் கூட்டணி இல்லை, 2026ல் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டி: பிரசாந்த் கிஷோர்

2 hours ago
ARTICLE AD BOX
தவெக கட்சியின் 2-வது ஆண்டு விழாவிலும் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர்

அதிமுகவுடன் கூட்டணி இல்லை, 2026ல் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டி: பிரசாந்த் கிஷோர் 

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2025
01:43 pm

செய்தி முன்னோட்டம்

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றி கழகம் தனித்தே போட்டியிடும் என அரசியல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர்.

தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து தீவிர அரசியலில் இறங்கிய போதே தன்னுடைய இலக்கு 2026 சட்டசமன்ற தேர்தல் என அறிவித்து விட்டார்.

அதை நோக்கி, அவரது கட்சி பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அவர் தேர்வு செய்ய, தற்போது தனது கட்சி செயல்பாடுகளுக்கு உதவ, தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, தவெக கட்சியின் 2-வது ஆண்டு விழாவிலும் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த் கிஷோர் பங்கேற்று உரையாற்றினார்.

பேட்டி

விஜய் தனித்து போட்டி: பிரஷாந்த் கிஷோர்

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், விஜய்யின் தேர்தல் வியூகங்களை பற்றி தெரிவித்துள்ளார்.

அவற்றுள் சில:

"தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். அதற்கு என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன்."

"பீகார் தேர்தலில் எனக்கு உதவி செய்வதாக விஜய் உறுதி அளித்துள்ளார். பீகாரில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்."

"2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே அவர் முடிவு."

"அதிமுக விஜய்யுடன் கூட்டணி அமைக்க விரும்பினாலும், அவர் அதிமுக உடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை"

"கூட்டணியின்றியும் விஜய் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவார். தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்பார். எனது வார்த்தையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்" என கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

"அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய் தனித்தே களமிறங்குகிறார்.." - விஜய்யின் மொத்த வியூகம் சொல்லும் பிரசாந்த் கிஷோர்#tvk #Vijay #PrashantKishor #ThanthiTV pic.twitter.com/GqRMSHm5LN

— Thanthi TV (@ThanthiTV) March 1, 2025
Read Entire Article