ARTICLE AD BOX
கரூர் அருகே பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கோவையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் - காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் காரில் பயணித்த 2 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒரு வழியாக போராடி பேருந்து அடியில் சிக்கி இருந்த காரை மீட்டனர்.

மேலும் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோர் தஞ்சாவூர் ஒரத்தநாடு கீழையூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்மிட சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. விபத்தில் கார் ஓட்டுநரும் உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றனர்.