அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொது விருந்து…!

3 hours ago
ARTICLE AD BOX

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று (03-02-2025) அனுசரிக்கப்பட்டது. அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணாவின் நினைவுநாளின் போது இந்துசமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களில் பொதுவிருந்து நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்துசமய அறநிலைத்துறை சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து கோவில் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சாதி, சமய வேறுபாடு இன்றி சுமார் 1057 பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்  பங்கேற்றனர். இதில், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், உறுப்பினர்கள் சுகந்தி, பிச்சைமணி, லட்சுமணன், சமயபுரம் பேரூராட்சி தலைவர் சரவணன் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்கள், முதியோர் மற்றும் பக்தர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புடவை வழங்கப்பட்டது.

The post அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொது விருந்து…! appeared first on Rockfort Times.

Read Entire Article