அடிக்கடி ஆபாசப் படம் பார்த்து, சுய இன்பம் செய்த மனைவி; விரக்தியில் கணவன் செய்த காரியம்..

3 hours ago
ARTICLE AD BOX

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில், இவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார். ஆனால், குடும்ப நீதிமன்றம் இவருக்கு விவாகரத்து வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தனது மனைவி வீட்டு வேலைகளை செய்வது இல்லை என்றும், ஆபாசப் படங்கள் பார்ப்பதற்கு அடிமையான அவர், அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். அது மட்டும் இல்லாமல், தனது மனைவி பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதை உறுதிப்படுத்தும் விதமாக, எந்த ஆவணங்களையும் அசோக் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை.

இந்த விசித்திரமான வழக்கை, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஆர்.பூர்ணிமா ஆகியோர் விசாரித்தனர். அப்போது அவர்கள், தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்களை பார்ப்பதும் குற்றமல்ல என்றும், பெண்கள் சுயஇன்பம் செய்வதை களங்கப்படுத்த முடியாது என்று கூறி இருந்தனர். மேலும், ஒரு பெண் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் விவாகரத்து கொடுக்க முடியாது என்று கூறி விவாகரத்து கோரிய கணவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதே போன்ற சம்பவம் ஒன்று சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது. ஆம், மனுதாரர் தனது புகாரில் தனது மனைவி அடிக்கடி ஆபாசப் படங்கள் பார்பதாகவும், செல்போன் கேம்களுக்கு அடிமையானதாகவும், தினசரி உடலுறவு வேண்டும் என்றும் டார்ச்சர் செய்வதாகவும் கூறி இருந்தார். மேலும், ஆபாச படங்களைப் பார்த்துவிட்டு தினமும் குறைந்தது மூன்று முறையாவது உடலுறவு கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவருக்கும் கோர்ட் விவாகரத்து வழங்க மறுத்தது.

Read more: திருநங்கையுடன் ஏற்பட்ட காதல்; பாலத்தின் அடியில் பொதுமக்கள் பார்த்த காட்சி.. விசாரணையில் சிக்கிய நபர்..

The post அடிக்கடி ஆபாசப் படம் பார்த்து, சுய இன்பம் செய்த மனைவி; விரக்தியில் கணவன் செய்த காரியம்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article