ARTICLE AD BOX
அடடேனு சொல்ல வைக்கும் பட்ஜெட் விலையில் 2 புதிய OPPO போன்கள்.. 6500mAh பேட்டரி, 12GB ரேம், 80W சார்ஜிங்!
இந்திய மொபைல் சந்தை புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தால் நிரம்பி வழியவுள்ளது. மார்ச் 19 ஆம் தேதியன்று அதன் ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி (Realme P3 Ultra 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் ஒப்போ நிறுவனம் அதன் 2 புதிய மாடல்களை மார்ச் 20 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
அது ஒப்போ எப்29 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதன்கீழ் ஒப்போ எப்29 5ஜி (Oppo F29 5G) மற்றும் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி (Oppo F29 Pro 5G) என 2 மாடல்கள் அறிமுகமாகும். இவ்விரு ஸ்மார்ட்போன்களும் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ குவாட் கர்வ்டு AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ராசஸர்
-12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2எம்பி டெப்த் சென்சார்
- 16எம்பி செல்பீ கேமரா
- 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 6000mAh பேட்டரி
ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.7 இன்ச் FHD+ டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்
- 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2எம்பி கேமரா
- 16எம்பி செல்பீ கேமரா
- 45W SUPERVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 6,500mAh பேட்டரி
இந்தியாவில் ஒப்போ எப்29 5ஜி மற்றும் ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போனின்விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? கிடைக்கப்பெற்ற லீக்ஸ் தகவலின்படி ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும், ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Realme P3 Ultra 5G Expected Specifications)?
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.83 இன்ச் 1.5K AMOLED மைக்ரோ கர்வ்டு டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட்
- LPDDR5x ரேம்
- UFS 3.1 ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50MP சோனி IMX 896 ப்ரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா
- 4K 60fps வீடியோ ரெக்கார்ட் ஆதரவு
- கேமராவில் சில AI அம்சங்களுக்கான ஆதரவு
- 16MP செல்பீ கேமரா
- பெரிய 6000mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- 7.38 மிமீ தடிமன் மற்றும் 183 கிராம் எடை உடன் மிக ஸ்லிம் ஆன டிசைனை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? விலையை பொறுத்தவரை, ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் இருக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது வெளியீட்டு சலுகைகளுடன் கூடிய விலை நிர்ணயமாக இருக்குமா அல்லது ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் ரீடெயில் விலையாக இருக்குமா என்பதை ரியல்மி நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை.