ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. பாகிஸ்தான் அணி இப்போது வரை 40 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது. சவுத் ஷகீல் (76 பந்தில் 62 ரன்) அரைசதம் விளாசினார். முகமது ரிஸ்வான் 77 பந்தில் 46 ரன்கள் அடித்தார். பாபர் அசாம் 23 ரன்னில் அவுட் ஆனார். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார்.
ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள். இந்த போட்டியில் இந்தியா ஒரு மோசமான சாதனையை படைத்தது. அதாவது இந்த போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் டாஸ் வென்றார். கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் டாஸ் இழந்தார். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் ரோகித் சர்மா டாஸ் இழந்திருந்தார்.
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலிருந்து ஒருநாள் போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக 12வது முறையாக டாஸ் இழந்துள்ளது. மேலும் இந்த வடிவ வரலாற்றில் எந்தவொரு அணியும் தொடர்ச்சியாக அதிக டாஸ்களை இழந்தது இல்லை. இதன்மூலம் 2011 மற்றும் 2013 க்கு இடையில் ஒருநாள் போட்டிகளில் 11 டாஸ்களை இழந்த நெதர்லாந்தின் மோசமான சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
துபாய் பிட்ச் மேதுவான தன்மை கொண்டது என்பதால் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் வெறும் 23 ரன்களில் அவுட் ஆன அவர், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட ஐசிசி ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை நிறைவு செய்தார். 30 வயதான அவர் ஐசிசி ஒருநாள் போட்டிகளில் தனது 24வது இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐசிசி ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 1014 ரன்கள் அடித்துள்ளார்.