ARTICLE AD BOX
நடிகர் அஜித்தின் 'குட்பேட் அக்லி' படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஆதிக் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்திற்குப் பிறகுத் தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தார். இந்த நிலையில் அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'மார்க் ஆண்டனி' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று வசூலை ஈட்டியதால், அவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
தொடர்ந்து தற்போது அஜித்தின் 63வது படத்தில் இணைந்துள்ளார். மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 'மார்க் ஆண்டனி' படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. ஆகையால் ஆதிக், அஜித் வைத்து எடுக்கப்போகும் இந்தப் படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவையே வில்லனாக நடிக்க அழைப்புவிடுத்திருக்கிறார் என்றுக் கூறப்படுகிறது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே மே மாதம் வெளியிடப்பட்டன. இதில் அஜித் கலர்புல்லான சட்டை அணிந்து ஸ்டைலான கூலர் போட்டு கையில் டாட்டுக்களுடன் மாஸாக இருந்தார்.
'விடாமுயற்சி' படத்தை தொடர்ந்து 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அஜித்துடன் மீண்டும் ஜோடியாகும் நடிகை திரிஷாவின் பெயர் ரம்யா என படக்குழு அறிவித்திருந்தது.
'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர், வரும் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
பொங்கலுக்கு வெளியான 'விடாமுயற்சி' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், அஜித் ரசிகர்கள் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.