ARTICLE AD BOX
Published : 26 Jan 2025 12:27 PM
Last Updated : 26 Jan 2025 12:27 PM
அஜித்துக்கு பத்ம பூஷண்: தலைவர்கள் வாழ்த்து; எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்!
<?php // } ?>சென்னை: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலகினர் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். எக்ஸ் தளத்தில் அஜித் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: “தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசின் பத்மபூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும்; பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லக்ஷ்மிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடைய வேண்டும், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.”
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: “ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதுக்கு நடிகர் அஜித் சார், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி மற்றும் ஷோபனா சந்திரகுமார் ஆகியோர் தேர்வாகி இருப்பது அறிந்து மகிழ்ந்தோம். அதேபோல, பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கும் என் அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளோர், அவரவர் துறைகளில் மென்மேலும் சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமைத்தேடித் தர வாழ்த்துகிறோம்.”
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்: “தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் அன்புத் தம்பி அஜித்குமாருக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகவும் மகிழ்ந்தேன். தன் கடும் உழைப்பால், தன் கவிர்ந்திழுக்கும் நடிப்புத்திறனால் வெற்றிப் படங்கள் பல தந்து, லட்சக்கணக்கான ரசிகர்களின் பேரன்பினையும் பெற்று, தமிழ்த் திரைத்துறையில் உச்சம் தொட்ட தம்பி அஜித், மகிழுந்து பந்தயத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டு, அண்மையில் அவரது அணி வெற்றிவாகை சூடி வரலாறு படைத்தது பேருவகை அளித்தது.
திரைத்துறையோ, விளையாட்டோ தேர்ந்தெடுத்த துறை எதுவானாலும் தம்முடைய அயராத முயற்சியால் தனிமுத்திரை பதித்து, சாதனை படைக்கும் தம்பி அஜித்குமாருக்கு வழங்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருதானது தகுதி வாய்ந்தவருக்கு மிகச் சரியாக வழங்கப்பட்டுள்ள விருதாக கருதுகிறேன். அன்புத்தம்பி அஜித்குமாருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!”
அமமுக தலைவர் டிடிவி தினகரன்: “பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகியிருக்கும் நடிகர் அஜித்குமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, நடன கலைஞர் ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளின் கீழ் தேர்வாகியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். மத்திய அரசின் உயரிய விருதுகளுக்கு தேர்வாகி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் மென்மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்தி மகிழ்கிறேன்.”
திமுக எம்.பி கனிமொழி: “தமிழ்நாட்டிலிருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும், பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லக்ஷ்மிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: “தன் வாழ்வின் பல கட்டங்களில் கடுமையான நெருக்கடிகளை கடந்து விடாமுயற்சியுடன் பல நிலைகளை வென்று பத்மபூஷண் விருது பெறவுள்ள சகோதரர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள்! கடின உழைப்புகளால் கனவுகளையும் கடந்த இடத்தை பிடிக்கலாம் என எண்ணற்ற இளைஞர்களுக்கு உதாரணமாக உள்ள அஜித் இன்னும் பல சாதனைகளும் அதற்கான விருதுகளும் பெற்றிட வேண்டும்!”
பாஜகவைச் சேர்ந்த தமிழிசை, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக தலைவர் அண்ணாமலை, சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா, இயக்குநர் ராஜமெளலி, சிபிராஜ், சரத்குமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ், விக்ரம் பிரபு, சசிகுமார், ராதிகா சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, மீனா உள்ளிட்ட பலரும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வாழ்த்துகள் குவிந்து வருவதால் #Ajithkumar, #Ajith, #PadmaBhusan மற்றும் #PadmaBhusanAjithkumar உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் தொடர்ச்சியாக ட்ரெண்ட்டிங்கில் இருந்து வருகின்றன.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை